இன்றையநிகழ்வு,நாளையவரலாறு .
கல்வி நிலையங்களில் சமுதாய மார்க்கமான வரலாற்றுப் பாடங்கள் புறக்கணிப்பாம்......
வேதனையான செய்தி தான்.
-------------------
நாங்கள் 1960, 70 களில் கல்லூரிகளில் படிக்கும்போது வரலாறு, புவியியல், தத்துவம், தர்க்கவியல் மாணவர்களைப் பார்த்தால் தேறாத கேசுகள் என்று சொல்லும் போது வேதனையாக இருக்கும். வரலாறு படித்தால் வாழ்வு கிடைக்காது என்று அன்றைக்கு ரசாயனம், பௌதிகம், மருத்துவம், பொறியியல், வணிகவியல் போன்ற பாடங்களிலேயே பெற்றோரும், மாணவர்களும் முன்டியடித்து படிக்க கல்லூரி முதல்வர்களிடம் நடையாய் நடப்பார்கள்.
இன்றைக்கு வரலாற்றுப் பாடங்கள் பள்ளி, கல்லூரிகள் வரை மூடப்பட்டு வருவதாக செய்திகள். ஆனால், ஐ.ஏ.எஸ்., போன்ற போட்டித் தேர்வுகளில் வரலாற்றுப் பாடங்கள் எளிமை என்று படிப்பதில் மட்டும் ஆர்வம் இருக்கும்.
ஒரு முறை டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆந்த்ரோபாலஜி முதுகலைப் படிப்பில் சேர நான் சென்ற போது, ஒரு பேராசிரியரே இதெல்லாம் ஒரு படிப்பா? என்று 1970களிலேயே பரிகாசமாக கேட்டதெல்லாம் உண்டு. வரலாறு என்பது ஆர்வமுள்ளவர்கள், அக்கறையுள்ளவர்கள் நிச்சயம் படிப்பார்கள். வரலாற்றுத் துறை இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி என்று அதற்கு மேலும் படிப்பைத் தொடர வேண்டிய பாடமாகும். வரலாற்றுக்கு எதுவும் இறுதி கிடையாது. இன்றைய நிகழ்வு, நாளைய வரலாறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த வரலாறு தான் சமுதாயத்தை கடந்த காலத் தவறுகளைத் திருத்தி நெறிப்படுத்தும் மார்க்கமாகும்.
#வரலாற்று_பாடத்திட்டம்
#History
#Histography
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-07-2018
No comments:
Post a Comment