Sunday, July 22, 2018

விவசாயிகள் தற்கொலை

விவசாயிகள் தற்கொலை
----------------------
சமீபத்தில் வெளியான தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரப்படி, கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் 8007 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. இப்போது விவசாயிகள் தற்கொலை என்று சொல்வதில்லை. ஆங்கிலப் பத்திரிக்கையாளர்கள் ‘கட் த நூஸ்’ (Cut the noose) என்று இந்த ரணத்தை கூறுவதை கேட்கவே வேதனையாக உள்ளது.

விவசாயிகள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். தற்கொலைகளும், விவசாய மரணங்களும் நடந்த வண்ணம் இருக்கின்றது. விவசாயம் மழையில்லாமல் பொய்த்துப் போவதும், விவசாய விளைப் பொருட்களுக்கு லாபகரமான விலையில்லாததும், கடன் பிரச்சனைகளும் விவசாயிகளின் நிம்மதியை குலைத்து நிலைகுலையச் செய்கின்றது.

உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனை இருக்கின்றது. குறிப்பாக இந்தியாவில் இது அதிகம். ஆஸ்திரேலியாவில் நான்கு நாட்களுக்கு ஒரு விவசாயியும், பிரான்சில் இரண்டு நாட்களுக்கு ஒரு விவசாயியும், பிரிட்டனில் வாரத்திற்கொரு விவசாயியும் மன அழுத்தத்தினால் மரணத்தை சந்திக்கின்றனர்.

இந்தியாவில் 1995 முதல் 2,70,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற கணக்கு இருந்தாலும், இந்தக் கணக்கை 1985லிருந்து கூட்டிக் கழித்துப் பார்த்தால் 5,00,000த்திற்கும் அதிகமான விவசாயிகள் கடன் சுமையாலும், வறுமையாலும், மன அழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை என்பது இந்தியாவில் மட்டும் தான் அதிகம் நடந்துள்ளன.

#விவசாயிகள்_தற்கொலை
#Farmers_Suicide
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-07-2018

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...