புதுக்கோட்டை – மதுரை சாலையில் பாடுபடும் வெள்ளந்திப் பெண்மணிகள்.
---------------------------------
மதுரையிலிருந்து தஞ்சாவூர் செல்லும்போது, புதுக்கோட்டை அருகே ஆதனக்கோட்டையில் முந்திரிக் கொட்டையை உடைத்து அதன் பருப்பை பிரித்தெடுப்பது சாலையோரங்களில் உள்ள கீற்றுக் கொட்டகையில் பகல் நேரங்களில் பார்க்கலாம். இங்கு வாங்கும் முந்திரிக் கொட்டையை நீண்ட நாள் கெடாமல் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் அந்த முந்திரிக் கொட்டையின் பாலை தனியாக பிரித்தெடுத்து உடைப்பார்கள். சூடாக உடைத்தால் தான் முந்திரிப் பருப்பு உடையாமல் முழுமையாக வரும். அந்த சூட்டோடு உடைக்கும் போது கைகளில் முந்திரிப் பால் விழுந்து கையும் கருத்துப் போய்விடும்.
இங்கு வேலை செய்யும் அந்த பெண்களுடைய கைகள் பார்க்கும் போது வேதனையடையச் செய்கிறது. இந்த சிரமங்களுக்கு இடையில் ஒரு மூட்டை முந்திரிக் கொட்டையை வாங்கி கஷ்டப்பட்டு உடைத்தால் 20 கிலோவுக்கு குறைவாகத்தான் கிடைக்கும். வரும்படியும் குறைவு. ஏதோ தொழில் ஜீவனம் செய்துக் கொண்டிருக்கிறோம் என்று அந்த பெண்களைப் பார்க்கும் போது சுயமரியாதையோடு தங்களுடைய தொழிலை உளப்பூர்வமாக செய்கின்றார்கள் இந்த வெள்ளந்தி மக்கள்.
#முந்திரிப்பருப்பு
#புதுக்கோட்டை
#Pudukottai
#Cashewnut
#Cashews
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-07-2018
No comments:
Post a Comment