Tuesday, July 17, 2018

விடுதலைப் புலிகள்.

குமுதம் ரிப்போர்ட்டரில் இலங்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகளு ்கு ஆதரவாக தைரியமாக மேடையில் பேசிய அமைச்சர் விஜயகலா குறித்து வந்துள்ள பேட்டியில் எனது கருத்துகள் முழுவதுமாக வரவில்லை.
 
"புலிகள் ஆதரவு என்ற வார்த்தை சிங்கள அரசை எவ்வளவு தூரம் அலற வைக்கிறது என்பதற்கு விஜயகலா பேச்சு ஒரு உதாரணம். காரணம், தமிழர் வரலாற்றை புரட்டிப் போட்டவர்கள் அவர்கள். அவர்களின் ஆளுமையும் வீரமும் சர்வதேசத்தில் தமிழர்களுக்கு தனி அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது என்பது உண்மை. 1990-களோடு இந்திய அரசு உதவி செய்வதை நிறுத்தினாலும் 2009 முள்ளிவாய்க்கால் சம்பவம் வரை தனித்தே அவர்கள் இயங்கினார்கள். ஈழ விடுதலைக்கு சீனா உதவி செய்ய வந்தபோதும் கூட இந்தியா தான் எங்கள் தாய்நாடு என்பதில் உறுதியாயிருந்தவர்கள் புலிகள். அவர்கள் இன்னமும் சர்வதேசிய அளவில் பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே விஜயகலா பேசியதை எளிதில் புறந்தள்ள முடியாது." என வெளியாகியுள்ளது.

#விஜயகலா_மகேஸ்வரன்
#ஈழத்_தமிழர்கள்
#விடுதலைப்_புலிகள்
#இலங்கை_அரசு
#LTTE
#Tamil_EElam
#VijayaKala_Maheswaran
#Srilankan_Government
#KSRadhakrishnan_Postings#KSRPostings



கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-07-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...