ஜெயலலிதா எழுதிய ‘ஒருத்திக்கே சொந்தம்’என்ற நாவலை 1980இல் மாலை மதி வெளியிட்டது.
இந்த நாவலை அப்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. நானும் இந்த நாவல் உயர்நீதிமன்றத்தின் அருகேயுள்ள சட்டக் கல்லூரியின் எதிரில் பிராட்வே துவக்கத்தின் முனையில், நாயர் பேப்பர் கடையில் விற்காமல் அப்படியே இருந்தது பார்த்துள்ளேன். ஒருத்திக்கே சொந்தம் என்ற ஒரு பிரதியை நானும் ரூ 1க்கு வாங்கினேன். சட்டத்தைப் பற்றியும் மனிதரின் போக்கைப் பற்றியும் அதில் எழுதியிருந்தார். அவர் பொருளாதாரத்தில் சிரமப்பட்ட நேரத்தில் இம்மாதிரி நாவல்கள் எழுதியது அவருக்கு உதவியாக இருந்தது. துக்ளக்கிலும், குமுதத்திலும் எழுதினார். பல்வேறு நல்ல சிந்தனைகள் இருந்தும், தவறான அணுகுமுறைகளினாலும் வழக்கு, சிறைவாசம், நோய், மரணம் என்று அவருடைய வாழ்க்கை முடிந்துவிட்டது.
Her thirst for political power destroyed all the beautiful side of hers....
#Jayalalitha
#ஜெயலலிதா
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-07-2018
No comments:
Post a Comment