Sunday, July 15, 2018

காமராசர் நினைவலைகள்

மீள் பதிவு 
காமராசர் நினைவலைகள்.
(காமராசர்115பிறந்தநாள்)
-------------------------------------
சென்னை, கலங்கரை விளக்கு அருகே காமராசர் சிலையொன்று உள்ளது. அந்த சிலையை கடக்கும் போது கடல் அலைகளை விட  பழைய நினைவலைகள் மிக உயரமாக மனதினில் எழும். அந்த சிலையை வடிவமைக்க எளிதானது அல்ல  என்று ஆரம்பத்தில் கூறினார்கள். ஆனால் பழ.நெடுமாறன் முடியும் என ஒற்றைக்காலில் நின்று செய்து முடித்தார். பீடம் மிக உயர்ந்து, கம்பீர காமராசராக காட்சி அளிப்பார்.  

சிலை அமைக்கும் குழு பழ.நெடுமாறன் தலைமையில் மனலிராமகிருஷ்ண முதலியார், வாழப்பாடி இராமமூர்த்தி, 
தி.சு.கிள்ளிவளவன், எம்.கே.டி.சுப்ரமணியம், ஏ.எஸ்.பொன்னம்மாள், க.பாரமலை  திருமாறன், திருவல்லிக்கேணி. திருநாவுக்கரசு, நாமக்கல்.சித்திக், மதுரை.ஆ.இரத்தினம், கடலூர் பூவை  ராமானுஜம்,முனவர் பாட்ஷா மற்றும்  அடியேன் போன்றவர்கள் அக்குழுவில் பணியாற்றி சிலையை வெற்றிகரமாக அமைத்தோம். அந்த சிலையை அன்றைய கவர்னர் மோகன்லால் சுகாடியா அவர்கள் திறந்து வைத்தார். 

அன்று காமராசருடன் நெருங்கி பணியாற்றியவர்கள் ஒரு சிலர்  இன்று உயிருடன் இருக்கின்றார்கள். சிலரின் பெயர்கள் வரலாற்றில் மறக்கப்பட்டு வரும் காரணத்தால் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.

பழ.நெடுமாறன், திண்டிவனம் இராமமூர்த்தி,  தஞ்சைஅ.இராமமூர்த்தி, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், யசோதா தண்டயுதபாணி,பீட்டர் அல்போன்ஸ், மதுரை.ஜான் மோசஸ், பழ.கருப்பையா, தெள்ளூர்.தர்மராஜன், நிஜ வீரப்பா, நாமக்கல் சித்திக், திருச்சி வேலுச்சாமி, ஜஸ்டின், திருவல்லிக்கேணி
திருநாவுக்கரசு, குறளரசு ஜெயபாரதி, வடசென்னை பலராமன், ஹக்கிம், 
குஜ்லியம்பாறை வீரப்பன், தஞ்சாவூர் முருகேசன்,நாகர்கோவில் முத்துக்கருப்பன்.

நினைவுக்கு வந்த பெயர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். சில பெயர்கள் விடுபட்டு இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன். 

#காமராசர்115பிறந்தநாள் 
#கலங்கரைவிளக்குகாமராசர்சிலை
#காமராசர்நினைவலைகள் 
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
15-07-2017




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...