Tuesday, July 3, 2018

நடிகர் எஸ்.வி.ரங்காராவ் - 100. ( 03.07.1918 - 18-07-1974)






நடிகர் எஸ்.வி.ரங்காராவ் 3.07.1918 ஆம் ஆண்டு எஸ்.கோட்டீஸ்வரராவ் - நரசம்மா தம்பதிகளுக்கு,  ஆந்திர மாநிலம்  நூஜ்வித் எனும் கிராமத்தில்  மகனாகப் பிறந்தார்.

  எஸ்.வி.ரங்காராவ் சிறந்த குணச்சித்திர நடிகர். குணச்சித்திர நடிகர் என்றால்  சிறுசிறு வேடங்களில் நடிப்பவர் என்ற பொருளல்ல.  அவர் ஏற்றுக் கொண்டு நடிக்கும் கதாபாத்திரங்கள் நல்ல குணங்களையும் நமக்கு சொல்லித் தரக்கூடியவை. அப்பொழுதெல்லாம்  ரங்காராவ் நடித்த படங்கள் என்றால்  குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று சொல்வதுண்டு. அவருடைய சிறந்த  நடிப்பாற்றலால் அன்னை, சாரதா, நானும் ஒரு பெண், கற்பகம், நர்த்தனசாலா(தெலுங்கு) ஆகிய 5 படங்களுக்காக சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். 
தெலுங்கில் சதுரங்கம், பாந்தவயலு என்ற இரண்டு படங்களை இயக்கினார் இரண்டுமே ஆந்திர அரசின் நந்தி விருதினை பெற்றது. குறுகிய காலத்தில் 160 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

மாயாபஜார் என்ற படத்தில் 1951 ஆம் ஆண்டு கடோத்கஜன் என்ற நகைச்சுவை கலந்த் வேடத்தை ஏற்று நடித்திருந்தார்.  பலர்  பட்டதாரிகளாக  நடித்தார்கள் ஆனால் பட்டம் பெற்ற பின் நடிக்க வந்தவர்களில் முதலாமானவர் ரங்காராவ். அடுத்தவர் ஜெமினி அவர்கள். 

60 வயது அப்பாவாக 70 வயது தாத்தாவாக நடித்திருந்தாலும் அவர் இயற்கை எய்திய போது  அவரது வயது 56 ( 1974) 

கால நீரோட்டத்தில் காணாமல் போன எண்ணற்ற கலைஞர்கள் மத்தியில் காலத்தால் அழியாத கலை பிம்பங்களை நம் கண் முன்னே உலவவிட்ட விரல் விட்டு எண்ணதக்க கலைஞர்களில் இன்றும் நினைத்துப் பார்க்கும் அளவுக்கு நல்லா கதாபாத்திரங்களை ஏற்று நடித்து கலை ரசிகர்கள் மனதில் வாழ்கின்றார். 

#எஸ்விரங்காராவ்100
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
03-07-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...