உ.வே.சாமிநாதய்யர் கடிதக் கருவூலம்
---------------------------------
நேற்று
பெசன்ட் நகரிலுள்ள உ.வே.சா. நூலகத்திற்கு அதன் பொறுப்பாளர் டாக்டர். உத்தராடனை
சந்திக்கச் சென்றபோது, சமீபத்தில் தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்ட “உ.வே.சாமிநாதய்யர்
கடிதக் கருவூலம் – தொகுதி I” புத்தகம் கிடைக்கப்பெற்றேன். பதிப்பாசிரியராக ஆ.இரா.வேங்கடாசலபதி
இந்நூலைத் தொகுத்துள்ளார்.
உ.வே.சாவிற்கு 1877 முதல் 1900 வரை பல்வேறு
தமிழறிஞர்கள் தாமோதரம்பிள்ளை, வித்வான் தியாகராஜ செட்டியார், ஊத்துமலை ஜமீன்தார்,
வ.வு.சிதம்பரனார், நமச்சிவாய தேசிகர், மேலகரம் செண்பகக்குற்றாலக்கவிராயர், மனோண்மனியம்
சுந்தரம்பிள்ளை, சுப்பிரமணியத் தம்பிரான், மறைமலை அடிகள், பாண்டித்துறைத் தேவர்,
பேரையூர் ஜமீன்தார் தும்பிச்சி நாயக்கர், எட்டையபுரம் ஜமீன்தார், பரிதிமாற்கலைஞர்,
சோமசுந்தரதேசிகர், திரிகூட இராசப்க்கவிராயர், ஜி.யு.போப், திருவாடுதுறை,
தருமபுரம், திருப்பணந்தாள் ஆதினகர்த்தர்கள் போன்ற முக்கிய புள்ளிகள் எழுதிய
கடிதங்களின் தொகுப்பாக, அக்கால வரலாற்று நிகழ்வுகளையும், சமுதாய போக்குகளையும்,
பழக்கவழக்கங்களையும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவுள்ளது.
உ.வே.சா
நூலகத்தில் பல தமிழ் நூல்கள் அச்சுக்கு வரவேண்டிய பணிகளை இரண்டு, மூன்று இளைஞர்கள்
துடிப்போடு செய்து வருவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.
#உ_வே_சாமிநாதய்யர்
#உ_வே_சாமிநாதய்யர்_நூலகம்
#U_Ve_Sa_libraray
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-07-2018
No comments:
Post a Comment