2015ல் இலங்கையில் மைத்திரி சிறிசேன அதிபர் பொறுப்பு ஏற்ற போது
தமிழ்மக்களுக்கு உறுதிபடக் கூறியவை.
•மகான அரசுகளுக்கு உரிய அதிகாரம்
வழங்கி, சமஸ்டி அமைப்பை பேணுவோம்.
•தமிழர்களுக்கான அரசியல் தீர்வை நிரந்தரமாக கிடைக்கச் செய்வேன்.
•இரானுவத்தை வெளியேற்றி காணிகள்
திரும்ப வழங்குவது , தமிழர் பகுதியுள்ள ராணுவத்தை திரும்பபெறப்படும். •கைதிகளை விடுதலை செய்யப்படுவர்.
•இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கச் செய்வேன்.
•தொலைந்தவர்கள் கண்டு
அறியப்படுபவர்.
இப்படி பல ஊறுதிகள்......
இதற்காக முன் வைத்தகாலை ஒரு போதும் பின் வைக்கமாட்டேன் என்றார் மைத்திரி.
ஐந்து வருடம் தான் பதவியில் இருப்பேன்.
அதன் பின்பு அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
முழு அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை ஒழித்துக் கட்டி நாடாளுமன்ற முறைமையை முழுமையாக நடைமுறைப் படுத்தி விட்டுத்தான் அரசியலில் இருந்து முற்றாக ஓய்வெடுப்பேன்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவரையில் இவர் நாட்டு மக்களுக்கு செய்த ஒரேயொரு நடவடிக்கை முழு அதிகாரத்தையும் பயன் படுத்தி மக்களால் தூக்கியெறியப்பட்ட இனவெறியன் மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக கொண்டு வந்து நிறுவியுள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு அரசியல் விரக்தியும், பாதுகாப்பற்ற வாழ்வும், உறுதியற்ற எதிகாலமும் தொடர்கிறது
.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29/10/2018
No comments:
Post a Comment