Monday, October 15, 2018

*நிமிரவைக்கும் நெல்லைக்கு தாமிரபரணி நதி ஜீவநாதம்.*















-------------------------------------
பணி நிமித்தமாக திருநெல்வேலி சென்றபோது, அங்குள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் தாமிரபரணி புஷ்கரணி விழா பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். 

பொதிகை உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் கலக்கும் தாமிரபரணி ஒன்று தான் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாகும். இந்துக்களுக்கு தாமிரபரணி புஷ்கரணி விழா முக்கியமானது தான். 

ஆனால் மக்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடுத்து சில குளிர்பான நிறுவனங்களுக்கும், தண்ணீர் நிறுவனங்களுக்கும் வழங்குவது நியாயம்தானா? அத்தகைய நிறுவனங்கள் அந்த தண்ணீரை அரசிடமிருந்து குறைந்த விலைக்கு பெற்று 10 ரூபாய்க்கு மேல் விற்கிறார்கள். இயற்கை அருட்கொடையாக தெற்குச் சீமைக்கு வழங்கிய பொருநை நதியை இப்படி வியாபார மயமாக்கியிருப்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த புஷ்கரணி விழாவை இயற்கைக்கான விழாவாக இந்து மத விழாவாக நடத்துகிறார்கள். நடத்தட்டும். 

மதநல்லிணக்கம் என்பது நாட்டில் இருக்க வேண்டியது அவசியம்.. 

•திருக்கோவில்களில் ஆறுகால பூஜைகள் நடக்கட்டும், 
•தேவாலயங்களில் மணியோசையோடு ஜெபங்கள் நடக்கட்டும், 
•பாங்கோசையுடன் 5 தடவை தொழுகைகள் நடக்கட்டும், 
•இறைமறுப்பு கொள்கைகளையை கொண்டவர்கள்  சதுக்கங்களில் முழங்கட்டும். 

தாமிரபரணியை கொண்டாடிகிறார்கள் . இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்றேன்.
நிமிரவைக்கும் நெல்லைக்கு இயற்கையின அருட்க்கொடை தாமிரபரணி என்ற நதி ஜீவநாதம்.

*படங்கள்.*
மலையிலிருந்து சமவெளிக்கு வரும் தாமிரபரணி, பாபநாசத்தின் அன்றைய, இன்றைய படம் மற்றும் இஸ்லாம் சகோதரர்களின் தாமிரபரணியை கொண்டவது......

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
14/10/2018

#பாபநாசம்
#தாமிரபரணி
#நிமிரவைக்கும்_நெல்லை
#Nimira_Vaikum_Nellai
#Tamirabharani
#Papanasam
#KSRPostings
#KSRadhakrishnanPostings**

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...