————————————
தமிழும் சைவமும் என் இரண்டு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன்கொள்வதே என் கடன்; அவை வாழப் பணிபுரிவதே என் வாழ்வின் குறிக்கோள்” என்று சொல்லி அதன்வழி வாழ்ந்தவர் ஆறுமுக நாவலர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆறுமுக நாவலர் ( 1822 - 1879 ) இல்லத்திற்கு கடந்த 27-9-2018 அன்று சென்று இருந்தோம். தமிழுக்கும், சைவத்துக்கும் அரும் தொண்டாற்றிய ஆறுமுக நாவலர் அவர்களின் வீடு என்கிற பெயரில் ஒற்றை சுவர் மட்டுமே எஞ்சி நிற்கின்றது.அதுவும்
சரியான பராமரிப்பும் இல்லை. பக்கத்தில் முதலை கூட்டை வைத்துள்ளனர்.
ஆறுமுகம் என்பது இவரது இயற்பெயர். அவரது தமிழ் சேவையை பாராட்டி திருவாடுதுறை ஆதினம் நாவலர் என்ற பட்டத்தை அளித்தது. பைபிளை தமிழ் மொழியாக்கம் செய்தவர்.
அவரது வாழ்விடம் அடையாளம் இழந்து போனாலும் அவரால் வளர்க்கப்பட்ட தமிழ் அவரது வரலாற்றை சுமந்து நிற்கும் என்பதில் அய்யமில்லை. இது குறித்த விரிவான பதிவு பின் ...
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
6-10 -2018
#ஆறுமுகநாவலர்
#KSRadhakrishnanposting
#KSRpostings
*
No comments:
Post a Comment