Wednesday, October 24, 2018

Me too -நூற்றுக்கு நூறு”

“Me too -நூற்றுக்கு நூறு”
------------------------

நாடு பொருளாதார நெருக்கடியை மட்டும் சந்திக்கவில்லை.அரசியல் அமைப்பு நெருக்கடியையும் சேர்த்து சந்திக்கின்றது. வேறு பிரச்சனைகள கூட.....ஆனால் me too!

‘நூற்றுக்கு நூறு’ 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி, நாகேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் அந்த காலத்திலேயே மீடூ #Me_too பேராசிரியர் பிரகாஷ் என்று ஜெயசங்கர் நடித்த வேடத்தை அவருடைய மாணவிகளாக நடித்த ஸ்ரீவித்யா, விஜயலலிதா, ஜெயக்குமாரி ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டினை அவர் மீது சாட்டினர். அன்றைக்கே, இதுபோன்ற மீடூ #metoo பிரச்சனையை மையப்படுத்தி திரைப்படமாக வந்தது. இந்த படத்தை கல்லூரியில் படிக்கிற காலத்தில் திருநெல்வேலி லட்சுமி தியேட்டரில் பார்த்த நினைவுகள் உண்டு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
24/10/2018

#KSRPostings
#KSRadhakrishnanPostings
#me_too
#நூற்றுக்கு_நூறு


No comments:

Post a Comment

Kerala