Sunday, October 7, 2018

நாட்டுப்புறயியல் -சில குறிப்புகள்:

—————————————

1)*நேரத்தைக் கணக்கிடுவது.*
***************************
அதிகாலை – 3 மணி – தலைக்கோழி கூப்பிடும் நேரம்
சூரிய உதயத்திற்கு முன்பு – பல பல என விடியற நேரம்
காலை 10 மணி - ஆடு எழுப்புகிற நேரம்
பகல் 12 மணி – உச்சி நேரம்
பிற்பகல் 3 மணி – பெரும் பானை உலை வைக்கும் நேரம்
மாலை 5 மணி – ஊர் மாடு வருகிற நேரம்
மாலை 6 மணி – கருக்கல் நேரம்
இரவு 10 மணி – ஊர் உறங்குகிற நேரம்
இரவு 11 மணி – ஒருச்சாமம்
இரவு 12 மணி – நடுச்சாமம் (அ) நடுநிசி.

2)*ஆட்டுக்கிடை*
**********************
ஆட்டுக்கிடைக்கு மேற்பார்ப்பவரைக் *கீதாரி* என்றும் *கிடைக்கோன்* என்றும் அழைப்பார்கள். மொத்தத்தில் கிடா கிடைக்கும் ஆட்டை ஒதுக்கும் போது வட்ட வடிவமாக நின்றுக் கொண்டு அவரவர் குரலில் கூப்பிடும் போது முதலில் ஒருவரும் பின்பு ஒன்றன் பின் ஒன்றாக அவர்கள் ஆடுகள் அனைத்தும் அவர்கள் இடத்திற்கு வந்துவிடும் இந்த இடத்தினை *பாங்கு* என்று சொல்வார்கள். இரவில் ஆடுகளைப் பாதுகாத்துக் கொண்டு இருப்பதை *பாங்கு முறை* என்று கூறுவார்கள். அவர்கள் தங்கி சமையல் செய்யும் இடத்தை *வலசை* என்று சொல்வார்கள்

3)*மாட்டின் வகைகள்.*
********************
• கருத்தக்காளை
• செவலைக்காளை
• மயிலைக்காளை
• புல்லக்காளை
• செம்போர்க்
இப்படி பல வகைகள்.

 *கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
07.10.2018
#கிராப்புறம்
#நட்புறயியல்
#கிராமப்புறகலைக்கண்காட்சி 
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 

.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...