தி. ஜானகிராமனின் நளபாகம்....
--------------------------------
.........கனிவாயில் ஜலம் ஊறி தூக்கங்கள் வந்து
கண்ட இடத்தில் பள்ளிகொள்வார் பைங்கிளிமாரும்
ஏட்டோட தயிர்வேணும் உப்பரட்டி வேணும்
கேட்டதெல்லாம்தான் கொடுக்கத் தாயாரும் வேணும்
ஏலம் களிபாக்கு ஜாதிக்காய் வேணும்
ஜாதிப்பத்திரி வால்மிளகு லவங்கமும் வேணும்
வெட்டுவெட்டாய்பாக்கு வேணும் வெற்றிலை வேணும்
முதல்தரமான முத்து சுண்ணாம்பும் வேணும்
நாலாம்மாதம் பிறந்த உடனே மசக்கை தெளிந்து,
வளர்பிறையில் ஐந்தாம் மாதம் வளைகாப்புமிட்டார்
சீருடைய ஆறாம் மாதம் சீமந்தம் பண்ணி
சிறப்புடனே நாத்தானாரும் பூவும் சூட்டினாள்
அழகான ஏழாம் மாதம் அப்பமும் கட்டி
எட்டாம் மாதம் பிறந்த உடனேதொட்டிலும் செய்தார்
ஒன்பதாம் மாதம் பிறந்தஉடனே சங்கிலிபண்ணி
ஒன்பதாம் மாதம் ஆனவுடனே ஊணும் ஒழித்தாள்
எட்டும் இரண்டும் பத்து மாதம் பூர்ணமாய் சுமந்தாள்
முத்துமுத்தாய் நெற்றிவேர்க்க முகங்கள் சிவக்க
பெத்தாளே பாலகரை முத்துமுத்தாக
நவமி திதி யோகவாரம் புனர்பூச நட்சத்ர
கடகலக்னம் மத்யானத்தில் ராமர் பிறந்தார்
விரைக்கோட்டை பதின்கலம் வெள்ளியும் பொன்னாம்
விரையுடனேதான் கலந்து வரதானம் செய்தார்
சொர்ண சங்கில் எண்ணெய் கொண்டு செவ்வெண்ணெய் போட்டி
சொர்ணமணி தொட்டிலிலே வளர்ந்திடவிட்டாள்
தங்கவளை சங்கிலிகள் தாழ்த்தியும் இட்டாள்
அமிர்தம் பொழியாறாப்போல் ஆனசொல் கேட்டு
ஒருவயது ஆனவுடன் ராமசுவாமிக்கு
ஆணரவுதான் செய்தார் ஆனந்தமாக............”
-
பக்கம்
263 – காலச்சுவடு பதிப்பகம்
தி. ஜானகிராமனின் நளபாகம்
No comments:
Post a Comment