Friday, October 12, 2018

புறத்தோற்றங்கள் உண்மையில்லை.




————————————————-

சோகங்கள் கண்ணீரில் மட்டும் மறைந்து இருப்பதில்லை,
வாய் விட்டு சிரிக்கும் பலரின் பொய்யான சிரிப்புகளிலும் ஒளிந்தும்,மறைந்துமிருக்கும் ......

புறத்தோற்றங்கள் உண்மையில்லை.
மன இறுக்கமும் - நிலைகொள்ளா ஊசலாட்ட எண்ணங்களும், மாமேதைகளையும் - மனோதிடம் மிக்கவர்களையும் கூட மண்ணுக்குள் ஆழ்த்திவிடுகிற அசுரபலம் கொண்டவை!. ஆயிரமாயிரம் பேர் தம் வாழ்வியலில் வசந்தத்தை தொலைத்த  சான்றுகளும், பல துன்பியல் நிகழ்வுகளும், இதன் உக்கிரமான பலத்தை,  அவ்வப்போது நமக்கு அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன!.

தலைவலியும் - காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்!, என்பர் உளவியலில் நுட்பமுணர்ந்த நம் முன்னோர்!. அதுபோலத் தான் புறச்சூழலால் விளைகிற, தீரா அக-உள்மன அழுத்தப் பெரும் பிணியை, கடந்து வெற்றிகரமாக மீள்வது எவ்வளவு கடினம் என்பதை அதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணரக் கூடிய ஒன்று!. மற்றவர்களால் மிக எளிமையாக பார்க்கப்படும்,இந்த சம்பவங்கள் எல்லாம்,  நிமிடங்களில் தீர்மானிக்கப்பட்டு  அரங்கேறுபவை அல்ல! . வெந்து -நொந்து  - நூலாகி வெளியிலும் பகிர இயலாது, அவற்றை தீர்க்கவும் வழிதெரியாது, விழிபிதுங்கி நாளடைவில் நடைபிணமாகி, மனநிலையை அவர்கள் பெற்றுவிடுகிறார்கள்!.

கரம்பிடித்ததோடு, அவரோடு கைகோர்த்து கடுந்தடைகளை கடந்து,  ஒருசேர வடம் பிடித்து இழுத்து  வந்த, மணவாழ்வின் வெற்றித் தேர், பரஸ்பரம் புரிந்துணர்வு,கோதை மண்ணில் புதைந்து, தேங்கி நின்று அனைத்தும் கசந்து விட்டது தான் துரதிருஷ்டம்!. 

மனவளமும் மற்ற வளங்களைப் போல மிகவும் மதிப்புறு பொருளன்றி வேறென்ன!?.

படுத்தாத பாடு
???

???
(

No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...