Thursday, October 25, 2018

அம்மாச்சி உணவகம்.

இலங்கை பயணத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் சேனாதிராஜா கிளிநொச்சியில் உள்ள அம்மாச்சி உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். விவசாயத் திணைக்களம் என்ற அமைப்பால் இந்த விடுதி நிர்வகிக்கப்படுகின்றது. இதை பற்றி அருமையாக ஈழத் தமிழர் உணவுகள் நளபாகமாகவும் ருசியாகவும் இருந்தது. தென் இலங்கையில் “ஹெல போஜன சால’’ என்ற உணவகங்கள் உண்டு. பாரம்பரிய உணவுகள் இங்கே கிடைக்கின்றன. வடக்கு மாகாண சபை 2014இல் அமைந்தபோது அம்மாச்சி உணவகங்கள் வடக்கு மாகாணத்தில் திறக்கப்பட்டன. அரசு நிதியுதவி இல்லாமல், அந்த நிதியை எதிர்பார்க்காமல் சமூக அமைப்புகள் வேண்டி விரும்பி இந்த உணவு விடுதிகளை வடக்கு மாகாணங்கள் முழுவதும் நடத்தி வருகின்றன. 2016இல் அமைந்த முல்லைத்தீவிலும் அதே ஆண்டு வவுனியாவிலும், 2018இல் மண்ணாரிலும் உருவாக்கப்பட்டன.
வவுனியாவில் நிறுவப்பட்ட இந்த அம்மாச்சி உணவகத்திற்கு ஐ.நா. நன்கொடை வழங்கியது. நான்காவது உணவகம் அங்குள்ள திருநெல்வேலியில் 2017 செப்டம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு பிறகு விவசாயத் துறையைச் சேர்ந்த அரசு நிதிகளும் கிடைக்கப் பெற்றன. முதலில் ஹெல போஜன சால அமைக்க வேண்டுமென்று சிங்கள அரசு வலியுறுத்தியது. ஆனால் திட்டவட்டமாக அந்த பெயர் தமிழர்களால் ஒப்புக் கொள்ளவே இயலவில்லை. ஈழத்தில் உள்ள திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட இந்த உணவகத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரனும், இலங்கை மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திசநாயகவும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி திசநாயக திரும்பவும் சிங்கள சொல்லை பயன்படுத்தச் சொல்லியும், பெண்களே நிர்வகிக்கும் இந்த அமைப்பை அம்மாச்சி என்று தான் அழைக்க வேண்டுமென்று தீர்மானமாக முன்னெடுத்தனர்.

கிளிநொச்சியில் தமிழக உணவு வகைகளும், ஈழ உணவுகளான பிட்டு, சொதி போன்ற உணவு வகைகளை காலையில் உண்டுவிட்டு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ருசியாக இருந்தது என்று பாராட்டினார். விலையும் மிக குறைவாகவே இருந்தது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23/10/2018

#KSRPostings
#KSRadhakrishnanPostings
#அம்மாச்சி_உணவகம்


#கிளிநொச்சி

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...