மாடுகள்
-------
கழுகுமலை,
மத்திய சேனை போன்ற மாட்டுச் சந்தைகளுக்குக் போனால் மாடுகளைப் பற்றியதான சில தரவுகளை
பலர் கூறக் கேட்டது உண்டு. அதுகுறித்தான விவரங்கள்.
நிறம்
வகைகள்
-------------------
அத்திக்காய்ப்புல்லை
கரிசமால்
கருஞ்சிவலை
கருத்தச்செம்பரை
கருப்பு
கருமயிலை
கருவெள்ளை
காரி
சந்தனப்புல்லை
சுத்தவெள்ளை
செந்தாலை
கண்ணாடி
மயிலை
கருங்குரால்
செந்தாரை
மயிலை
செம்பரை
செவலைச்செம்பரை
செவலை
நாவெள்ளை
பஞ்சகல்யாணி
புல்லை
புளியம்போர்ச்செம்பரை
மயிலை
வெள்ளை
காளை
மாட்டுக் கொம்பு வகைகள்
---------------------------------------
அலைகொம்பு
ஆட்டுக்கொம்பு
காடுபார்த்த
கொம்பு
கிளிக்
கொம்பு
குத்துக்
கொம்பு
கூடுகொம்பு
கொக்கரிக்கொம்பு
கொள்ளிக்கொம்பு
சுருட்டைக்கொம்பு
பூங்கொம்பு
பொத்தைக்கொம்பு
மட்டிக்கொம்பு
மாடக்கொம்பு
முன்கொம்பு
விரிகொம்பு
மாட்டின்
லட்சணங்கள்
----------------------
சிறியவை
ஐந்து - தலை, கொம்பு, தாடி, கோசம், வால்
பெரியவை
ஐந்து - கண், நெஞ்சு, கழுத்து, எலும்புகள், கால்கள்
சுழிகள்
(“சுழிசுத்தம்”)
--------------------------
அசைவுச்
சுழி - சிமிளுக்கு திமில் உச்சியில் இருப்பது
அஞ்சி
சுழி - முன்மண்டையிலிருந்து வால்வரை நடுமுதுகையொட்டி ஐந்து சுழிகள் இருப்பது விசேஷம்.
அஞ்சிசுழி
மாடு கெஞ்சினாலும் கிடைக்காது.
இடிமேல்இடி
கொடைமேல்க் கொடை - இந்தச்சுழி நெற்றியில் கீழும் மேலுமாக இருப்பது. இந்த மாடு வைத்துக்கொண்டிருப்பவர்கள்
சிலருக்கு கஷ்டத்துக்கு மேல் கஷ்டங்கள் தொடர்ந்து வருகிறது. சிலருக்கோ அதிர்ஷ்டத்துக்கு
மேல் அதிர்ஷ்டம் வந்து குவிகிறது என்கிறார்கள்.
கால்
விலங்கு - முன்முழங்காலின் அடிப்பாகத்தில் இருக்கும் சுழி
டமானச்
சுழி - முதுகில் இரண்டு சுழிகள் இட வலப்புறமாக இரக்கும்
நச்சுழி
- முதுகில் ஒரு சுழி, நல்ச்சுழி
பட்டரைச்
சுழி - சிமிளக்குப் பின்பக்கம் இருக்கும்
பறவைச்
சுழி - முன்கால்களின் தோள் புஜத்தில் இருபுறமும் இருக்கும். இந்த மாடு வேகமாய் இருக்கும்
பாசிபந்து
- கொம்புக்கு பின்னால் பிடரியில் ஒரு சுழி இரப்பது இயற்கை. இதில் இரண்டு இருந்தால்
பாசிப்பந்து சுழி
பாடைச்
சுழி - முதுகில் இரண்டு சுழிகள் முன்னும் பின்னுமாக இருப்பது
பிடரிச்
சுழி - கொம்புக்குப் பின்னால் இருக்கும் இயற்கைச் சுழி
பிடரி
விலங்கு - கொம்புக்குப் பின்னால் இரு சுழிகள் முன்னும் பின்னுமிருப்பது.
பூரான்
சுழி 1 - கொம்பு முதுகில் வலதுபுறம் ஒரு சுழியும் நச்சுழியும் இருப்பது
பூரான்
சுழி 12 - முதுகில் இடதுபுறம் ஒரு சுழியும் நச்சுழியும்
பெண்டிழந்தான்
- வாலின் அடியில் தானவாய் ஓரத்தில் இருக்கும் சுழி.
மண்டை
விலங்கு - முன்நெற்றியில் இடவலமாக இரு சுழிகள் இருப்பது
முளை
பிடுங்கி - முன்கால் ஒன்றிலோ இரண்டிலுமோ கும்பிற்கு மேலே சுழி சுழித்து மேல்நோக்கி
இருப்பது
மேக்காச்
சுழி - சிமிளுக்கு முன்பக்கமாக இருப்பது
நிர்க்குத்து
- நீர்த்தாரைக்கு நேராக முதுகில்இருப்பது. இதை தட்டினால் மாடு நீர்விடும் என்பார்கள்
நெத்திச்சுழி
- நெற்றியில் ஒரு சுழி இருப்பது
மாட்டின்
வயது பற்றி
--------------------
காளைக்கன்று
மூன்று வருடங்கள் கழித்துப் பல்ப்போடும். பல்ப் போட்டிருச்சா? என்று கேட்பார்கள் இது
காளையின் ஒரு பிரயாத்தைக் குறிப்பது.
கீழ்வாயில்
பால்ப்பற்கள் உதிர்ந்து இரண்டு பற்கள் முளைக்கும். இதைத்தான் பல்ப் போட்டிருக்கிறது
என்பது. பிறகு அதை ஒட்டி வருசத்துக்கு இரண்டு இரண்டு பற்கள் முளைக்கும். நாலு வருசங்களில்
8 பற்கள் போட்டுவிடும். இதை கடை தேறீச்சி என்பார்கள்.
இதன்பிறகு,
ஒவ்வொரு வருடத்தையும் ஒருசோடு அல்லது உழவு என்று குறிப்பிடுவார்கள். ஒங்க மாட்டுக்கு
இப்போ வயசு ரெண்டு உழவு இருக்குமா? என்று வினவுவார்கள்.
சந்தையில்
மாட்டை விலை பேசும்போது,,,
----------------------------------------------------
சம்சாரிகளின்
மாட்டை தரகர்களும் வியாபாரிகளும் கைபோட்டு விலை பேசுவார்கள். கைகளை துணியால் மூடிக்கொண்டு
ஐந்து
விரல்களைக் கூட்டிப் பிடித்தால் 500 ரூபாய், அதையே ஒரு குலுக்கு குலுக்கினால் 1000
ரூபாய் என்றும், விரல்களிலுள்ள ஒவ்வொரு வரையும் 10 ரூபாய் என்றும் அவர்களுக்குள் ஒரு
நிர்ணயம் உண்டு.
இவ்வளவுண்ணா
கொடுத்துறலாமா
இல்லெ;
இதுக்கு குறைஞ்சி முடியாது
சரி;
இதே இப்பிடிவச்சி முடிங்க
இந்த
மாதிரி பேச்சொலி தான் மற்றவர்களுக்கு கேட்குமே தவிர விலை தெரியாது.
இப்படி
இவர்கள் மாட்டின் விலையைப் பேசும்போது உச்சரிக்கும் சில ஒலிக்குறிப்புகள்
தட்டை
தாளு
சவடு
இவைகள்
என்ன தொகையைக் குறிக்கும் என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25/10/2018
#KSRPostings
#KSRadhakrishnanPostings
#நாட்டு_மாடுகள்
No comments:
Post a Comment