"இந்த புகழ்,பெருமை popularity எதையும் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளாதே...
அப்போதுதான் அது இல்லாதபோது,
கிடைக்காதபோது
வருத்தம் இருக்காது"
தி.ஜானகிராமனின் இசைப்பயிற்சி கதை.......
"நாலைந்து வருடங்களாக, ஊருக்கு வந்து குடியேறிய நாள் முதலாக இறக்கம், ஒரு சோர்வு! பாடச் சொல்லி எவன் கேட்கிறான் இங்கே? அதற்கு முன்னால் மட்டும் என்ன வாழ்ந்தது? சென்னைக்குப் போனபோது, பெரிய வித்வானாய், கொடி கட்டிப் பறக்கவேண்டும் என்று தான் போனது. போன வேளையோ என்னவோ, கையைக் காலைப் பிடித்து முழுசாகப் பத்து கச்சேரி தேறவில்லை. ட்யூஷன் வாத்தியாராகவே காலம் தள்ளும்படியாகிவிட்டது.
பெரிய மனிதர்கள் காலைப் பிடிப்பதற்குப் பதிலாக, சின்ன மனிதர்கள் காலைப் பிடிப்பது பலித்தது. அவர்களுக்கு நம் கஷ்டங்கள் புரியும். கடைசியில் அதுவும் அவ்வளவாகப் பயனில்லை. புருஷன் பெண்டாட்டிக்குக் கூடக் காணாமல் தான் சென்னையில் சம்பாதிக்க முடிந்தது என்றால் ஒரு மனிதனுடைய அதிர்ஷ்ட்டம் எவ்வளவு பெரியது! வாடகை தராமல், காசு கொடுத்து அரிசி, பால், மோர், கறிகாய் வாங்காமல் காலந்தள்ள கிராமம் இருக்கும்போது, பட்டணம் என்ன, பம்பாய் என்ன? சோற்றுக்குத் தானே பாடினோம் என்று ஆகிவிட்டபோது, பாடாமலேயே சோறு கொடுக்கிற பட்டிக்காட்டை விடவா சொர்க்கம்?"
#திஜானகிராமன்
#காவேரிகரை
#கிராமத்தில்நிம்மதி
#சுதந்திரபூமி..... வும்
No comments:
Post a Comment