————————————————
சமூக வலைதளங்களில் நல்லபல கருத்துகளை எடுத்து வைத்து, நல்ல கருத்துக்களை அறிதல் நன்மை பயக்கும்.
“ஈழத்தமிழர் பிரச்சனையை 2009இல் இருந்து ஆரம்பிப்பவர்களிடமும்; மற்ற பிராதன சிக்கல்கள்,விடயங்கள்,
சங்கதிகள் என சிந்திக்காமல் சினிமாவிலிருந்து ஆரம்பிப்பவர்களிடமும் நீங்கள் பேசுவதில் ஒரு பயனுமில்லை . நேர விரயத்தை தவிர. அதை குறையுங்கள்”.
ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன் அரசியல் இயக்கம் துவங்கினோம் என்பதற்காக அந்த மண்ணின், இனத்தின், போராட்டத்தின் வரலாறும் அங்கிருந்து துவங்குகின்றது என பொருளாகாது.
இலங்கை தமிழர்கள் தங்கள் உரிமைக்காக போராட்டும் வரலாறு 1947 முதலே துவங்குகின்றது. அவர்களுக்கு ஆதரவாக குரல்கள் 1953முதல் தமிழகத்தில் எழுகின்றது. வரலாறு இப்படியாக இருக்க 2007ல் இருந்து தான் பேசுவோம் என்பது மடமை.
நரசிம்மராவ் ஆட்சி செய்த காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உலகமயமாக்கல், தராளமயக்கல் கொள்கைக்கு பின்னால் சூழல் மாறியது. மாறிவரும் சுழ்நிலையில் பங்களாதேஷ் போன்று போராட்டத்தின் மூலம் சுதந்திரன் பெறுவோம் என்பதெல்லாம் சாத்தியப்பட போவதில்லை.
பேச வேண்டிய பிரச்சனைகளை பிரச்சனைகளாக பேசாமல், பிரச்சனை வரும் என பேசக் கூடாத பிரச்சனைகள் குறித்து பேசி, விளக்கு வெளிச்சம் தேடுகின்றனர். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அவர்களுக்கான சுயநிர்ணய உரிமை இருந்தும் வெற்றி பெற இயலாமைக்கு உலகமயமாக்கல் கொள்கைகளும் ஓர் காரணம் . சிலருக்கு புரிதல் இல்லை.
வரலாறு என்பது தேர்க்காலில் கட்டப்பட்ட வடம் போன்றது. தொடர்ச்சியாக பிடித்து இழுத்தால் தான் தேர் நகரும். நுனியில் மட்டும் பிடித்துக் கொண்டு என்ன தான் ஐலேசா போட்டாலும் தேர் நகராது. வரலாறு என்பது ஓடிவரும் ஆற்று நீரைப் போல தொடர்ச்சியாக இருக்க வேண்டும். சிறுபாகத்தை பிடித்துக் கொண்டு தேங்குதல் கூடாது.
இங்கு பேசப்பட வேண்டியவைகள் பேசுப்படுவதில்லை, பேச வேண்டாத விசயங்கள் அதிகளவில் ஆர்வமாக பேசப்ப்டுகின்றன. சில நேரங்களில் தேவையற்றவைகளை கையில் எடுத்து தேவையானவைகளை மறக்கடிக்க செய்கின்றார்கள்.
இன்றும் வைரமுத்து குறித்த சர்ச்சைகள் பேசப்படுகின்றன. அதன் உண்மைத் தன்மையை நானறியேன். இதை விவாதிக்கலாம்.இல்லை என்று சொல்ல வில்லை.காலம் தான் அதற்கு விடை அளிக்கும் ஆனால் அந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டை சீரழிக்கும் ஊழல்களை, பொருளாதார பின்னடைவை , பொறுப்பற்ற அரசின் போக்குகளை என முக்கிய பிரச்சனை களை பின்னுக்கு தள்ளி விட்டோம். இதுதான் இன்றைய யதார்த்தம்
Issues are non issue here, Non issues are issues here.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
12-10-2018
#ஈழவரலாறு
#தமிழகஅரசியல்
#அற்பர்கள்அரசியல்
#Nonissuesareissues
#KSRadhakrishnanpostings
#KSRpostings
No comments:
Post a Comment