ஐநா மனித உரிமை
ஆணையத்தில் இழுத்தடிக்கப்படும் தீர்மானத்திற்கு தீர்வு என்னவோ?
ஐநா மனித உரிமை
ஆணையத்தின் 39வது கூட்டம் 28/09/2018அன்று ஜெனீவாவில் முடிவுற்றது.
கடந்த 2009இல் இலங்கையில்
இராஜபக்சே ஆட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை
செய்யப்பட்டனர். மேலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முள்வேலி முகாம்களில் அடைத்து
வைக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். பல்வேறு சித்ரவதை, இரணங்களை ஈழத்தமிழர்கள் உட்படுத்தப்பட்டனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சே ஆட்சியில்
சிங்கள இராணுவம் நடத்தி இந்த கொடுமைகளைக் குறித்து விசரிக்க ஐநா மனித உரிமை ஆணையம்
ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதை இராஜபக்சே அப்போது எதிர்த்தார். டப்ளின் நிரந்தர
மக்கள் தீர்ப்பாயத்தில் இதை குறித்து முழுமையாக விசாரணை நடத்தி; அது வழங்கிய தீர்ப்பில்
இலங்கையில் இராஜபக்சே தமிழினத்தினை அழிக்கும் கொடூர செயல்களை புரிந்துள்ளார். எனவே
இதைக் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று கூறியது.
இதன்பின் ஜெர்மனியில்
கூடிய சர்வதேச தீர்ப்பாயமும், அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு பகுதியில் அடைக்கலமாக
வாழ்ந்த தமிழர்கள் மீது கொத்து குண்டுகள் வீதிக் கொன்றதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளது
என்றும், மேலும் இதை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஈழத்தில் 2009க்குப்
பிறகு நடந்த இறுதிப் போரில் ஈழத்தில் நடந்த போர் குற்றங்களையும் அவசியம், பன்னாட்டு
சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டுமென்று 74 பக்கங்கள் உள்ள அறிக்கையை ஐநா மனித உரிமையின்
ஆணையர் நவநீதம்பிள்ளை 17/12/2014 அன்று பரிந்துரைத்தார்.
அதன்பின், மனித
உரிம ஆணையராக பொறுப்பேற்ற ஜெயின்ட் ரா அல் உசேன், இலங்கை அரசும் இதற்கு ஒத்துழைப்பு
வழங்காமல், இலங்கயில் என்ன நடந்தது என்று உண்மையை கூறவரும் மக்களையும் இராஜபக்சே அரசு
அச்சுறுத்தியது. இப்படிப்பட்ட ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று
சுப்பிரமணிய சாமி திருவாய் மலர்ந்துள்ளார். இந்த கருமாந்திரம் ஏடா கூடமாக பேசிக் கொண்டே
திரிவதையும் பாஜககாரர்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவருக்கும் அந்த கட்சியில்
மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தும் கொண்டாடிக் கொண்டு வருகிறார்கள். ஜனநாயகத்தில்
இந்த துர்நாற்றங்களை பார்க்க வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.
இந்த கீர்த்தி வாய்ந்த
பாரத ரத்னா இது வரை ராஜாஜி, நேரு, வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், அபுல்கலாம் ஆசாத்,
லால் பகதூர் சாஸ்திரி, வினோபாவே, இந்திரா காந்தி, காமராஜர், ஜாகீர் உசேன், அம்பேத்கார்.
சர்.சி.வி. இராமன், விஸ்வரேஸ்வரய்யா, ஏ.பி.ஜே. அப்துல் குலாம், அயல் நாடுகளைச் சேர்ந்த
கான் அப்துல் கபார் கான், நெல்சன் மண்டேலா, அன்னை தெரசோ போன்ற பலர் பெற்ற விருதை ராஜபக்சேவுக்கு
வழங்க வேண்டுமென்று சுப்பிரமணிய சுவாமியின் பேச்சைக் கூட கவனிக்கப்படுவதை நினைத்தால்
நாடு எங்கே செல்கிறது என்று கவலையைத் தான் தருகிறது.
இப்போது சொல்ல வேண்டிய
விடயத்திற்கு வருகிறேன். ஐநா மனித உரிமை ஆணையம் ஈழப்போரைக் குறித்தான தீர்மானத்தில்
வருகிற 6 மாதத்திற்குள் தகுந்த நடவடிக்கைகளும், தீர்வுகளும் மேற்கொண்டால் தான் நியாயங்கள்
வெளிப்படும். மேன்மேலும் இலங்கை அரசாங்கம் காலக் கெடுவைக் கேட்டு கேட்டு இந்த தீர்மானத்தின்
தாக்கத்தை நீர்த்துப் போகச் செய்வது வாடிக்கையாகிவிட்டது. ஐநா மனித உரிமை ஆணையமும்
வருகின்ற 6 மாதத்திற்குள் என்ன செய்யப்போகின்றேதா என்ற கவலை ஈழத்தமிழர் மத்தியில் வேதனையான
விவாதம் நடந்துக் கொண்டு இருக்கிறது.
அவ்வாறு மேலும்
இந்த தீர்மானத்தில் நாட்களைக் கடத்திக் கொண்டே போனால் தீர்மானத்தின் கால அளவால் தள்ளுபடி
ஆகிவிடும்.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-10-2018
No comments:
Post a Comment