Thursday, October 25, 2018

கழுகுமலை - வெட்டுவான் கோவில்

கழுகுமலை - வெட்டுவான் கோவில்

சமீபத்தில் திருநெல்வேலி சென்று தாமிரபரணி குறித்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டு கழுகுமலை வெட்டுவான் கோவிலை பார்க்க வேண்டுமென்று விருப்பம் ஏற்பட்டது. அங்கு சென்றபோது, அற்புதமான கருப்பு வெள்ளை புகைப்படங்கள் திருநெல்வேலி நண்பர்கள் வாயிலாக கிடைத்தது. எங்களின் கரிசல் மண் பகுதிக்கு அடையாளமாக திகழ்கிறது இந்த வெட்டுவான் கோவில். எல்லோரா காலத்தை ஒட்டிய இந்த கற்கோவில் மலையிலிருந்து வெட்டப்பட்டுள்ளதை மக்கள் இன்னும் அறிந்திராதார். இந்த கற்சிலைகளை பார்த்தாலே அறியாதவர்களும் இதன் புகழை வெளிப்படுத்தவேண்டுமென்ற உந்துதல் நிச்சயம் ஏற்படும். இந்த வெட்டுவான் கோவில் அனைவராலும் கவனிக்கப்பட்டு மனதில் மாமல்லபுரத்தைப் போன்று நிறுத்திக் கொள்ள வேண்டிய தமிழர்களின் அடையாளமாகும். இதைவிட தமிழர்களுடைய தொன்மையை எப்படி சொல்லமுடியும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25/10/2018

#KSRPostings
#KSRadhakrishnanPostings
#வெட்டுவான் கோவில்
#தமிழக_சிற்பங்கள்

























No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...