Wednesday, October 24, 2018

விவசாயின்ரணம்.......

#விவசாயின்ரணம்.......

எதிர்பார்த்த மழை இல்லை கிணற்றிலும் நீர் இல்லை இரண்டு மழை பெய்தது சேற்று உழவு செய்ய டிராக்டர் வரவில்லை, வயலில் தேங்கிய நீர் வற்றிய பிறகு டிராக்டர் வருகிறது, ஒரு வழியாக இருக்கும் கிணற்று  நீரை பயன்படுத்தி பாதி நிலத்தை சேறு உழவு செய்தால் நடவுக்கு ஆள் கிடைக்கவில்லை, அதன்பிறகு வந்ததும் இரண்டு பேர் மறுநாள் அவர்களும் வரவில்லை மீண்டும்  மீண்டும் சென்று வற்புறுத்தி அழைத்த போது அதே இரண்டு பேர் மட்டுமே வந்தனர்,சேறு உழவு செய்யப்பட வேண்டிய நிலம் பாக்கியுள்ளது, அதற்குள் டிராக்டர்காரரும் நீர் இருந்தால்தான் மீதம் உள்ள நிலத்தை சேறு உழவு செய்ய முடியும் என டிராக்டரை எடுத்து சென்று விட்டார், நடவும் மீதமுள்ளது ஆட்களும் இல்லை நீரும் இல்லை பருவ மழையை மட்டுமே நம்பி உள்ளோம். இங்கு ஒன்று கிடைத்தால் ஒன்று கிடைப்பதில்லை ஒவ்வொரு செயலிலும் போராட்டமும், மன உளைச்சலும் மட்டுமே மிஞ்சுகிறது, ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, நீர் பற்றாக்குறை, இன்னும் எத்தனை,,, இயற்கையின் மீது நம்பிக்கை வைத்து  ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறோம். இதையெல்லாம்  அனுபவமாக எடுத்துக்கொண்டு  தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறோம்.

உண்மைதான் ஒரு ராணுவ வீரனை விட அளவற்ற நெஞ்சுரம் வேண்டும் விவசாயியாக இருக்க.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...