Sunday, October 14, 2018

*ஏற்காடு சங்கதி-முன்னாள் பிரதமர் சந்திரசேகர்;ஜனநாயகத்திற்கு குரல் கொடுத்தவர் ஜனநாயகத்தை சாகடிக்கலாமா*

*ஏற்காடு சங்கதி-முன்னாள் பிரதமர் சந்திரசேகர்;ஜனநாயகத்திற்கு குரல் கொடுத்தவர் ஜனநாயகத்தை சாகடிக்கலாமா*
-------------------------------------
சமீபத்தில் ஏற்காடு, சேர்வராயன் மலைப் பகுதிகளுக்குச் சென்றபோது, முன்னாள் பிரதமர் சந்திரசேகர் கன்னியாகுமரியிலிருந்து நடைபயணம் நடத்தி டெல்லியில் முடித்தார். அவர் அப்போது சென்ற வழிகளில் கொடுக்கப்பட்ட நன்கொடையைக் கொண்டு ஏற்காட்டிலும், டெல்லி அருகேயுள்ள நிஜாமுதினிலும், உத்தரபிரதேசத்தில் உள்ள பாலியாவிலும், பசுமைக் காடுகளோடு குடில்களையும் அமைத்திருந்தார். ஏற்காட்டில் உள்ள குடிலை அமைத்தபோதும், அங்கு பசுமைத் தாவரங்களை வளர்க்கும்போதும் சென்று பார்த்திருக்கிறேன். 1980களில் மத்திய அமைச்சராக இருந்த மது தந்தவதே,சுரேந்திர மோகன், இரா.செழியனோடும் தங்கியுள்ளேன். ஏற்காட்டில் உள்ள பண்ணை நிலத்தில் அவரோடு அன்றைக்கு நடைப்பயணம் வந்த அன்றைய ஜனதா கட்சியின் மாநில மாணவர்த் தலைவர் பாலசுப்பிரமணியம் அதை நிர்வாகித்து வந்தார். அதற்கு பிறகு அவரோடுஎனக்கு தொடர்பில்லை. 

சமீபத்தில் ஏற்காடுக்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதனோடு சென்றிருந்த போது அந்த நிலங்களை பார்க்கையில் வேதனையாக இருந்தது. சந்திரசேகர் விரும்பியதும், அவரது நோக்கமும் அங்கு பார்த்தபோது சீரழிக்கப்பட்டுள்ளதே என்ற வருத்தம் தான் ஏற்பட்டுள்ளது. ப

சந்திரசேகர் இளம் துருக்கியர் என்று அறியப்பட்டாலும், அவர் 1991இல் திமுக ஆட்சியை ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு கலைத்தால் ஏற்பட்ட பாதகத்தினால் அவருடைய நேர்மை பாழ்பட்டது என்பது வேறு விடயம். 

ஏற்காட்டில் அவர் வாங்கிய இந்த நிலங்கள் சரியாக பராமரிக்கப்படாமலே இருப்பது ஒரு மாபெரும் குறை தான். இதை சந்திரசேகருக்கு நெருக்கமானவர்கள் கவனிக்க
வேண்டாமா என்பது தான் வினா. பலவகையான மரங்கள் அடர்ந்த காடாக இருந்த பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு, குடில்கள் காணாமல் போய் ஒரு வியாபார கடையைப் போல காட்சியளிக்கிறது. படத்தில்யுள்ளபடி இந்த பிரச்சனையை யாரும் இதுவரை வெளியே கொண்டு வரவில்லையே என்பது தான் நம்முடைய கவலை. 
சந்திரசேகர் திமுக ஆட்சியை கலைத்து தனக்கு களங்கத்தை தேடிக் கொண்டாலும், இந்திரா காந்தி எமர்ஜென்சி காலத்தை தன தலைவியை எதிர்த்து வெளியே வந்ததை மறக்க முடியாது.

#கலைஞர்
#சந்திரசேகர்
#திமுக_ஆட்சி
#chandra_sekar
#DMK_Government
#Kalaignar
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14/10/2018




No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...