ஏர் உழவு.....?
---------------------
ஏர் மாறின் பார் பாரும்
வண்டலை வஞ்சி
வாய்புண் ஆரா!
வளர் பனை வீழின்
வாய் நனையா வாநீர்
வாக்கு மாறின் வம்சம் மாறும்
வசதி பார்த்து வரன் தேடின்
வாழ தேறா
வழி தவறும் கோல்
சிவன் வாசம் போல்
ஏர் உழவைப் பற்றியும், முன்பிருந்த பாரம்பரிய விவசாயத்திலிருந்து நகர்ந்து விவசாயிகள் இரசாயன உரங்களை பாவித்து தங்களுடைய இயல்பான நிலையை விட்டுவிட்டார்களே என்று வேதனையோடு கரிசல் மண்ணிலிருந்து கவிஞர் உக்கிரபாண்டியின் கவிதை இது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20/10/2018
#KSRPostings
#KSRadhakrishnanPostings
#வடகிழக்கு_பருவமழை
#கரிசல்_மண்
#ஏர்_உழவு
No comments:
Post a Comment