Friday, October 19, 2018

சிவகாசியும், சீனப் பட்டாசுகளும்

சிவகாசியும், சீனப் பட்டாசுகளும்
-----------------------------
கந்தக கரிசல் பூமியான சிவகாசி என்ற குட்டி ஜப்பான் இன்றைக்கு பன்னாட்டளவில் வல்லாமையாக இருக்கின்ற சீனாவோடு பட்டாசு உற்பத்தியில் போட்டி போடுகிறது. சாமானியர்கள், அங்குள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் சீனப் பட்டாசுகள் இந்தியாவில் பெருகுவதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். சீனா; அமெரிக்காவிற்கு எதிராக ஐரோப்பாவிலும் தன்னுடைய வல்லாமையை காட்ட ஆரம்பித்துவிட்டது.
அப்படிப்பட்ட செல்வாக்கான சீனாவுக்கு எதிராக பட்டாசுப் பிரச்சனையில் சிவகாசி கடுமையாக பாதிக்கப்பட்டாலும், அயராது தங்களின் நீண்டகால தொழிலை விடாமல் செய்துவருவதை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும். இந்த ஆண்டும் தொழிற் போட்டியில் சீனாவை எதிர்த்து அங்குள்ள பட்டாசு உற்பத்தி தொழிலாளர்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கின்றனர்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18/10/2018

#KSRPostings
#KSRadhakrishnanPostings
#சிவகாசி_பட்டாசுகள்
#சீனப்_பட்டாசுகள்



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...