#ஜெனீவாவில் நடைபெற்ற #ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின்40வது கூட்டத் தொடருக்கு பங்கேற்க வேண்டி கேட்டு எனக்கு முறைப்படி இந்த வருடம் கடிதம் வந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் கவிஞர் கனிமொழிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழல் காரணமாக செல்ல இயலவில்லை. இருப்பினும் எனது மனுவை ஐநாமனிதஉரிமைகள் கவுன்சிலின் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மனுவை கிடைக்கப் பெற்றது என பதில் வந்தது சற்று மனநிறைவை தந்தது.
இலங்கை முள்ளிவாய்க்கால்,நந்திக்கட ல் கொடூரங்கள் நடைபெற்று 10 ஆண்டுகள் ஆகிறது. முள்ளிவாய்க்கால் துயரங்களுக்கு இரங்கலும், அஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்தக்கூடிய நிலையில்தான் நாம் இருக்கிறோம்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நான் கொடுத்த நேர்காணல்.
1. ஈழத்தில் நடந்த இந்த இன அழிப்புக்கு காரணமானவர்களை தண்டிக்கக்கூடிய வகையில் சர்வதேச சுதந்திரமான நம்பகமான புலனாய்வும், விசாரணையும் நடத்தப்பட வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் 8 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும் அது நிலுவையில் இருப்பதும் வேதனையையும் ஏமாற்றத்தையும் தருகிறது.
2. இறுதிப் போர்க்காலத்தில் கைதியான தமிழர்களை உடனே சிங்கள அரசு விடுதலை செய்ய வேண்டும்.
3. முள்ளிவாய்க்கால் கொடூரத்திற்கு பிறகு காணாமல் போனவர்களை கண்டறிந்து அவருடைய உறவினர்களிடம் சேர்க்க வேண்டும்.
4. தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றத்தையும், தமிழருடைய நிலங்களை சிங்களர்கள் அபகரித்ததையும் தடுத்து நிறுத்தி விவசாயக் காணி நிலங்களை திரும்பவும் தமிழர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
5. தமிழர்கள் விரும்பும் தமிழ் ஈழமோ, தனி நாடோ என்ற அரசியல் தீர்வை முடிவெடுக்க ஈழத்தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு (Referendum) ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் நேர்மையாக நடத்திட வேண்டும்.
6. வடக்கு, கிழக்கு பகுதியில் வாழும் தமிழர்கள் பகுதியில் பீதி ஏற்படும் வகையில் உள்ள சிங்கள ராணுவத்தை திரும்ப பெற வேண்டும்.
7. வடக்கு, கிழக்கு மாநில மாகாண கவுன்சில்களுக்கு கூட்டாட்சி (Federal - சமஷ்டி) அடிப்படையில் அதிகாரங்கள் ஒற்றை ஆட்சிமுறை என்பதை மாற்றி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
8. ஈழப்பகுதியில் தரையில் 10
ஆண்டுகளுக்கு முன்னால் புதைக்கப்பட்ட கன்னி வெடிகள் இன்னும் இருப்பதாக நம்பப்படுகிறது. அதை குறித்தான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
9. இறுதிப் போரில் கணவர்களை இழந்து விதவைகளாக வாழும் பெண்களுக்கு புனர்வாழ்வு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
10. இந்தியா வழங்கிய பில்லியன் கணக்கான பணத்தை முறையாக தமிழர்களுக்கு தான் சென்றுள்ளதா என்று இந்திய அரசு அவசியம் கண்காணித்து அறியவும் வேண்டும்.
இவையெல்லாம் தான் ஈழத்தமிழரின் வாழ்வுக்கு நல்ல எதிர்காலத்தை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டுமானால் இந்த விடயங்களை கவனிக்க வேண்டும்.
விதியே, விதியே, தமிழ்சாதியே.
#முள்ளிவாய்க்கால்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-05-2019
No comments:
Post a Comment