———————————————-
கருவாடு என்பது பலர் அறிந்திருக்க வாய்புண்டு ஆனால் நாம் உண்ணும் அசைவ உணவுகளில் கொழுப்பு சத்து மிக மிக குறைவான உணவு கருவாடு தான் .நெத்திலி, வெள்ளை நெத்திலி,நெய் மீன் கருவாடு, சங்கரா, சீலா,பாற,அவளி,சாலை,வில்லை மீன்,விளா,பளா,பாறை என பல வகை கருவாடுகள் உண்டு. மாசிவகையும் உண்டு. ராமேஸ்வரத்திலும் கருவாடு உற்பத்தி அதிகம்.
வாரத்தில் ஒரு நாளாவது சிக்கன் மட்டன் என கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் நாம் சுவை நிறைந்த உடலுக்கு ஆரோக்கியமாண கருவாட்டை மறந்துவிட்டோம் என்பதே கசப்பான உண்மை.!
நம்முன்னோர்கள் செவ்வாய் வெள்ளி தவிர்த்து பெரும்பான்மையான நாட்களில் பழைய கஞ்சி முதற்கொண்டு சாம்பார் வரை அனைத்துடனும் கருவாடு கூட்டுடன் சேர்த்து சாப்பிடுவதை பார்த்திருப்பிர்கள். தினமும் உண்ணும் அசைவ உணவுகளில் கருவாடு தான் நமது வீட்டை ஆக்கிரமித்திருக்கும்.!
அதுபோல இந்தியாவின் கடலோர பகுதி ஊர்களில் கிடைக்கும் மீன்களில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வகை மீன்கள் தனி சுவையுடன் இருப்பதுண்டு.அந்த வகையில் தூத்துக்குடி கருவாடு என்றால் அதற்கென தனி சிறப்பும் சுவையும் உண்டு என்பது உலகறிந்த விஷயம்.கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த உணவு பொருளாகவும் குழந்தை பேறுக்கான மருத்துவ உணவாகவும் கருவாடு தமிழர்களின் மிக முக்கிய உணவுபொருளாகவிளங்குகிறது.
தூத்துக்குடி கருவாடு மற்றும் மீன் வகைகள் உலகின் பல நாடுகளுக்கும் பயணிக்கிறது என்பது தூத்துக்குடி, விளாத்திகுளம் வேம்பாரின் பெருமைமிகு குறிப்புகளில் ஒன்று.நாம் விரும்பி உண்ணும் உணவுகள் பலருக்கு கிடைக்கவில்லை என்பதே தற்போதைய நிதர்சனமான உண்மை.கால ஓட்டத்தில் பணிசுமையில் கிடைத்ததை உண்னும் நிலைக்கு காலம் நம்மை கடத்திவிட்டது.தூத்துக்குடி மற்றும் வேம்பார் கடலில் கிடைக்கும் மீன் வகைகளை சுத்தமான முறையில் கடற்கரை மணலில் வெயிலில் காய வைத்து பக்குவம் இந்த கருவாடு மிகவும் சுவையாக இருக்கும். கார்பரேட் மார்கெட்டிங் பெருகிவிட்ட நிலையில் கருவாட்டு உற்பத்தி குறைந்துவிட்டது.
29-05-2019
No comments:
Post a Comment