-------------------
நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடியும் தருவாயில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை மொத்தமாக சூறையாடி அவற்றை முற்றாக அழித்தொழித்து விடும் கார்ப்பரேட்டுகளின் ஆட்டத்தை தீவிரமாக செயல்படுத்த முன்வந்துள்ளது மோடி அரசு. மத்திய நிதித்துறை அமைச்சகம் எவ்வளவு விரைவாக நான்கு மாதங்களுக்குள் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக முடித்து ஒட்டுமொத்தமாக பொது சொத்துக்களை எல்லாம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாற்றி விடும் இலக்கை நிர்ணயித்துள்ளது இதற்கான வேலைகளை வேகமாக நிர்ணயித்துள்ளது. நான்கு மாதங்களுக்குள் முடிக்க முடியாது எனக் கருதப்படும் சில பெரிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை சற்று கூடுதல் காலம் எடுத்துக் கொண்டு ஆறு மாதத்திற்குள் முடித்திட வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏர் இந்தியா போன்ற பெரிய நிறுவனங்களின் பங்குகளை விற்க இப்படி அதிகபட்சமாக ஆறு மாத காலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்ற கொள்கை ஏற்கனவே அமலில் உள்ளது. நான்கு மாத காலத்திற்குள் ஒட்டு மொத்த விற்பனையும் முடித்துவிடவேண்டும் என்று தற்போது வழி காட்டப்பட்டுள்ளது என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் மட்டும் 90,000 கோடி அளவிற்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கிறது.
குறிப்பாக பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பங்கு விற்பனையை உடனடியாக முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த நிறுவனங்களை நிதி ஆயோக் ஒரு நீண்ட பட்டியலை தயாரித்து நிதி அமைச்சகத்திடம் ஏற்கனவே அளித்திருக்கிறது. அதன்படி நல்ல லாபம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தற்சமயம் நஷ்டத்தில் ஓடும் வெவ்வேறு நிறுவனங்கள் என மொத்தமாக 35 பொதுத்துறை நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் பல நிறுவனங்களில் ஊழியர்களின் கடுமையான போராட்டத்தின் காரணமாக அந்த விற்பனை நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் நிதி அமைச்சகம் இருந்து வந்தது. இந்த நிலையில் தொழிலாளர்கள் போராடினால் அவர்களை கடுமையாக ஒடுக்கி பங்கு விற்பனை எப்படியேனும் நடத்துவது என்ற முடிவோடு நிதி அமைச்சகம் இறங்கியிருக்கிறது. குறிப்பாக விற்பனைக்காக தீர்பமானிக்கப்பட்டுள்ள நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏ.டி.எஸ்.எல், பி.இ.எம்.எல், ஸ்கூட்டர் இந்தியா, பாரத் பம்ப்ஸ் கம்ப்ரஸ்ஸஸ் மற்றும் சேலம் துர்காபூர் பத்ராவதி ஆகிய பொதுத்துறை இரும்பு மற்றும் எஃகு ஆலைகள் ஆகியவை மீண்டும் நிதி ஆயோக்கின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களின் பங்கு மதிப்புகளை மூன்று அல்லது நான்கு மாத காலத்திற்குள் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட வேண்டுமென உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்துஸ்தான் ப்ளூரோ கார்பன், இந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட், எச்.எல்.எல் லைப் கேர், சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ், பிரிட்ஜ் அன்டு ரூப் இன்டியா, நகர்நார் இரும்பு எஃகு ஆலை மற்றும் இந்தியா சிமெண்ட் கழகத்தின் பல்வேறு ஆலைகள் மற்றும் ஐடிடிசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை அப்படியே ஒட்டுமொத்தமாக தனியாருக்கும், கார்ப்பரேட்களுக்கு தாரை வார்த்துவிடுவது என்று தீர்மானித்து அதற்கான ஒப்புதல்களை பெறும் முன்மொழிவுகளை நிதி ஆயோக் உருவாகி இருக்கிறது
இந்த நிறுவனங்களை 2017 18 ஆண்டுகளிலேயே பங்குகள் விற்பனை மற்றும் நிறுவனங்களின் மொத்தமாக விற்று விடுவது எனத் தீர்மானித்து அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் ஊழியர்களின் தொடர்ச்சியான மற்றும் அரசியல் கட்சிகளின் வலுவான போராட்டங்களின் காரணமாக அரசின் அவசர சட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழகத்தில் சேலம் இரும்பு ஆலையில் தனியார்மயம் எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள், அனைத்து எதிர்க்கட்சிகள் கடுமையான போராட்டத்தை நடத்துவது நினைவுகூறத்தக்கது. இது குறித்து நான் தமிழகத்தின் மஹாரத்தினம் விற்பனைக்கு என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை வருமாறு.
#சேலம்_இரும்பாலை
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-05-2019
No comments:
Post a Comment