*குழப்பத்தை உருவாக்கி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தவர் மீது #சென்னை மாநகர சைபர் குற்றப் #பிரிவுக்கு புகார் கடிதம். *
————————————————
தேவையற்ற வகையில்
குழப்பத்தை உருவாக்கி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர சைபர் குற்றப் பிரிவுக்கு இன்று இரவு (21-5-2019)
அனுப்பப்பட்ட புகார் கடிதம்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
**********************
21-5-2019
அனுப்புநர்
கே. எஸ். இராதாகிருஷ்ணன்,
வழக்கறிஞர்,
4 / 359, அண்ணா சாலை,
பாலவாக்கம்,
சென்னை – 600 041.
பெறுநர்
காவல்துறை ஆணையர் அவர்கள்,
சைபர் கிரைம் பிரிவு,
மாநகர காவல் துறை,
சென்னை.
மதிப்பிற்குரிய காவல் துறை ஆணையர் அவர்களுக்கு,
வணக்கம்.
நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் எனது பணியை செய்து வருகிறேன். அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளராகவும், உலக, இந்திய, தமிழக வரலாறுகளையும், சமூகப் பணிகளையும், அது தொடர்பான பதிவுகளையும், தகவல்களையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றேன். உச்சநீதிமன்றத்தில் நதிநீர் இணைப்பு, கைதிகளுக்கு வாக்குரிமை, பஞ்சாயத்து ராஜ் போன்ற பொதுநல வழக்குகளும், சென்னை உயர் நீதிமன்றத்தில் 1983இல் தூக்கு தண்டனை கூடாது என்றும், கூடங்குளம், காவிரி, கண்ணகி கோட்ட பிரச்சனை, தமிழக மேலவை அமைத்தல், தமிழக நீர்நிலை பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்சினை போன்ற பல பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளேன். தேசிய மனித உரிமை ஆணையத்திலும், மாநில மனித உரிமை ஆணையத்திலும், மனித உரிமைகள் குறித்தான வழக்குகளையும் தாக்கல் செய்தேன்.
நான் தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் களப்பணிகளில் ஈடுபட்டிருந்ததால் எனது உதவியாளர் மூலம் நான் சொல்லும் கருத்துகளை பதிவு செய்து வந்தேன். ஈழத்தமிழர் நலனுக்காக தொடர்ச்சியாக பல்வேறு களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றேன். அவ்வாறு பதிவு செய்த போது தவறுதலாக அந்த பதிவுக்கு பொருந்தாத படத்தினை பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. அது தொடர்பான பதிவு ஒன்றில் கடந்த 18-05-2019 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி என் உதவியாளர் மூலம் எனது கருத்துக்களை பதிவு செய்தேன். அந்த படத்தை நீக்கி அது தொடர்பாக விளக்கப் பதிவும் இட்டுவிட்டு அதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டேன். அதற்கான ஆதாரம் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது.
இவ்வாறாக விளக்கத்திற்கு பின்னரும், நான் பதிவு செய்யாத கருத்துக்களை சில விசமிகள் போட்டோஷாப் (Photoshop) போன்ற நவீன தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி கருத்து உருமாற்றம் செய்து எனது பெயரில் சமூக வலைத்தளங்களில் ‘கே.எஸ்.ராதாகிருசுண நாயுடு‘, ‘வடுகவியல்‘ என்றெல்லாம் தேவையில்லாமல் மனக்கசப்பை உருவாக்கக் கூடிய பொய்யான பதிவை; அவர்களே ஒரு போலியான பதிவை உருவாக்கி அதை வெளியிட்டுள்ளார்கள். இதில் மு.அமிர்தராஜ் என்பவர் தனது டைம்லைன் மற்றும் பின்னூட்டங்களில் தவறான பரப்புரை செய்து வருகின்றார். அதற்கான ஆதாரப் பதிவு இந்த இணைப்பில் உள்ளது.
மேற்காணும் இணைப்பில் உள்ள பதிவினை இந்த இணைப்பில் (https://www.facebook.com/amirtan87) உள்ளவர் மற்றும் சிலர் என் மீதும் நான் சார்ந்துள்ள அமைப்பு, என்னுடைய பின்புலத்தை எல்லாம் தவறாக சித்தரித்து எனது நன்மதிப்பிற்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நான் ஈழத் தமிழர் மற்றும் தமிழக நலன் கருதி சட்டங்களுக்குட்பட்டு ஆற்றிய பணிகள் ஏராளம். இவற்றையெல்லாம் அறியாதவர்கள் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமுதாயத்தில் நன்மதிப்பை பெற்றுள்ள எனக்கு இதுபோன்ற அவதூறுகள் மனதிற்கு சங்கடத்தையும், தினசரி நிகழ்வுகளில் குந்தகம் விளைவிக்கும் நோக்கிலும், நண்பர்கள் மற்றும் மக்களிடம் என் மீதான மரியாதையையும் சீர்குலைப்பதாக உள்ளது.
இதுபோன்றவர்களை நான் சந்தித்ததும் இல்லை. எனக்கு அவர்களுடன் எவ்வித முன்விரோதமும் இல்லை. அப்படி இருக்கும்போது இவர்கள் என் மீது அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கதாகும்.
எனவே இந்த விடயத்தில் காவால்துறை தலையிட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன். நான் வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் எதிர்வரும் 26ஆம் தேதி நேரில் வந்து இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக தங்களிடம் புகார் அளிக்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
தங்களின் உண்மையுள்ள,
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
சென்னை - 600 041.
rkkurunji@gmail.com
+91 9840474606
இணைப்பு.
1. எனது விளக்கம்
2. பொய்யான பதிவு
3. அவதூறு பரப்பும் பின்னூட்டம்
No comments:
Post a Comment