ஒட்டப்பிடாரம் இறுதி பிரச்சாரம்.......
------------------------------
ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தஇறுதி பிரச்சாரம் மாலை 5 மணிவரை நடந்தது. இன்றைக்கு ஒட்டநத்தம்,கொல்லங்கிணர், கீழப்பூவானி, காசிலிங்கபுரம், சிங்காத்தாகுறிச்சி, காரசேரி, தெய்வத்செயல்புரம், எல்லைநாயக்கன்பட்டி, பொட்டல்யூரணி, கொம்புக்காரநத்தம் என பல கிராமங்களுக்கு சென்று காலை முதல் மாலை வரை வாக்காளர்களை சந்தித்து கழக வேட்பாளர் சண்முகய்யாவை ஆதரித்து வாக்கு சேகரித்தோம்.
உடன் முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, பிரச்சார அ. கணேசன், க. அண்ணாதுரை, வலசை அசோக், வலசை ரமேஷ், ஒட்டநத்தம் சுப்பையா, வள்ளிநாயகபுரம் ஜெகநாதன், கீழப்பூவானி குமார், கணேசன், முத்து,பூவானி விஜயகுமார், வசந்த், காரச்சேரி ஆழ்வார்சாமி, தேவசெயல்புரம் ஞானதேசிகன், கங்காநாயக்கர், பொட்டல்யூரணி கிருஷ்ணன், கொப்புக்காரநத்தம் சீனிவாசன் என நிர்வாகிகள் பலர் உடன் வந்தனர்.
இன்றைய சுற்றுப் பயணத்தில் ஒட்டப்பிடாரத்தின் முக்கிய பிரச்சனையான பெரியகுளம், மலர்குளம் சீரமைப்பு, மழைக்காலங்களில் வரும் வெள்ளப்பெருக்கை கோராம்பள்ளம் வரை சென்று கடலில் கலப்பதை தடுத்து மழைநீரை சேமிக்க உரியநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வாக்காளர்கள் கோரிக்கைகளை வைத்தனர்.
கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் கவிஞர் கனிமொழி போட்டியிட்டது முதல் இன்று வரை 59 நாள் தேர்தல் பணியில் கரிசல் மண்ணிலே கழிந்தது ஒரு புதிய அனுபவம். 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வட்டார அரசியல் கள பல நண்பர்களையும், வடக்கே சாத்தூரிலிருந்து தெற்கே தூத்துக்குடி விமான நிலையம் வரை, மேற்கே சங்கரன்கோவிலில் இருந்து கிழக்கே வேம்பார் எல்லை வங்கக் கடல் வரை கிராமங்களுக்கு சென்றதும் மகிழ்ச்சியை தந்தது.
இதயச்சுத்தியோடு தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஒட்டப்பிடார சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளை மனப்பூர்வமாக நிறைவு செய்தேன் என்ற திருப்தியும், மகிழ்ச்சியும் தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் ஏற்பட்டது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-05-2019
No comments:
Post a Comment