Thursday, May 30, 2019

வறட்சி; யார் காரணம்? கவனித்து சிந்தியுங்கள்*

*வறட்சி;யார் காரணம்? கவனித்து சிந்தியுங்கள்*
-------------------------------------
*** வற்றாத நதியான பவானி வறண்டது. கோவை, திருப்பூருக்கு தண்ணீர் தட்டுப்பாடு.
*** நெல்லை மாவட்டம் காரையாறு அணை வற்றியது. சேறும், சகதியுமாக மீன்களும் செத்து கிடக்கிறது. துர்நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது.
*** நெல்லை மாவட்டத்தின் இராமநதி ஒரு சொட்டு நீர் இல்லாமல் வறண்டுவிட்டது.
*** காவிரி பாயும் 11 மாவட்டங்களில் அனைத்து நீர்நிலைகளும் வறண்டன.
*** வறட்சியால் விளைநிலங்கள் மேய்ச்சல் நிலங்களானது.
*** நெல்லை மாவட்டத்தில் மட்டும் குடிநீர் ஒரு குடம் ஐந்து ரூபாய்க்கும் ஒரு பேரல் 50 ரூபாய்
*** தூத்துக்குடியில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் 
*** தாராபுரத்தில் ஒரு குடம் தண்ணீர் 7 ரூபாய்
*** சென்னைக்கு தண்ணீர் தரும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், மதுராந்தகம்,
போரூர் ஏரிகள் வற்றி மண் பாலங்களாக வெடித்துள்ளது.
*** பொன்னேரியில் உள்ள ஆரணி ஏரி வறண்டுவிட்டது.
*** பெரியபாளையம் முக்கிரம்பாக்கம் ஏரியும் வறண்டுவிட்டது.
*** திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1416 ஏரிகள் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.இப்படி
நீண்ட பட்டியல்......
*** சுகாதாரமற்ற நீரால் நோய் பரவும். நிலத்தடி நீரை பாதுகாக்கவில்லை.
*** அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் கொளுத்துகிறது. 
*** மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மரங்களை வெட்டி வறட்சியை நாமே உருவாக்கினோம்.
*** வற்றாத நதிகளில் மணலை அள்ளி நிலத்தடி நீரை பாழ்படுத்திவிட்டோம்
*** ஓசோன் படலத்தில் நம் பேராசையால் அழித்து வருகிறோம்.

பிறகு எப்படி மழையையும், தண்ணீரையும் பார்க்க முடியும். இப்படித்தான் தமிழகத்தில் நீராதாரம் உள்ளது.
KSRadhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-05-2019
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: outdoor and nature
Image may contain: beach, ocean, sky, outdoor and nature

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...