Monday, May 13, 2019

திருநெல்வேலி சமண கற்படுக்கைகள்

பாளையங்கோட்டை அருகே சமண கற்படுக்கைகள்,மருகால்தலை பகுதியில் காணப்படும் சமணர் கற்படுக்கையை பராமரிக்க
வேண்டும்.சமூக விரோதிகளின் கூடரமாக இப்பகுதி மாறுவதைத் தடுக்க வேண்டும்.

பாளையங்கோட்டையிலிருந்து ஒன்பது கி.மீ தொலைவிலிருக்கும் சீவலப்பேரிக்கி அருகே மருகால்தலை என்ற ஊரில் பூலாவுடையார் மலையின் தென்பகுதியில் அமைந்துள்ள குகையில் சமண முனிவர்களின் கற்படுக்கைகள் காணப்படுகின்றது.
வெண்காசிபன் கொடுப்பிதழ் கஞ்சனம் என்ற ஒருவரி கல்வெட்டு குகைப்பாறையின் நெற்றிப்பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த கல்வெட்டின் காலம் கி.பி ஒன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம்.
வெண்காசிபன் என்பவர் இங்குள்ள குகைப் பாறை கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்ததால் அவரது பெயரைக் குறிப்பிட்டுக் கல்வெட்டு இருக்கிறது.தமிழ்பிராமி எழுத்தில் இது பொறிக்கப்பட்டுள்ளது.எழுத்துக்கள் ஒரே சீராக இல்லாமல் பெரியதாகவும் ஒழுங்கற்றுமிருக்கின்றன.
இந்த சிறு குன்றின் அருகிலுள்ள மலைப்பகுதியில் பாகுபலியின் சிற்பம் ஒன்று இருக்கிறது.தற்போது சாஸ்தாவாக உள்ளூர் மக்கள் அதனை வழிபடுகின்றனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கற்படுக்கைகளயும் பூலாவுடையார் மலைப்பகுதியையும் பாதுகாக்க அரசு நடவடிக்கைஎடுக்கவேண்டும்.

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இப்பகுதி தற்போது பாழடைந்து கொண்டு இருக்கிறது.சமூக விரோதிகள் இப்பகுதியை திறந்தவெளி மதுக் கூடமாக மாற்றிவருகிறார்கள்.
இதை தடுக்க வேண்டுமென்று வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தமிழகத்தில் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் சமணமும், பௌத்தமும்தழைத்தோங்கியிருந்தன.அப்போதிருந்த அரசர்களின் செல்வாக்கும் இருந்ததால் இவை செல்வாக்கு பெற்றிருந்தன.ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் அவை செல்வாக்கிழந்தன.

மருகால்தலையிலுள்ள மலைக்குன்று கல்வெட்டை 1906 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஹேமைட் என்பவர் முதன்முதலாக கண்டறிந்தார்.இங்கு சுவாமி அழகிய அம என்ற எட்டாம் நூற்றாண்டு எழுத்தமைப்பில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது.இதுபோல் சேர்ந்தமரம், வீரசிகாமணி, ஆய்க்குடி, கழுகுமலை பகுதிகளும் சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன.
இந்த சமண கற்படுக்கைகள், கல்வெட்டுகள் மிகவும் பழமை வாய்ந்தவை.இவற்றைப் புதுப்பிக்க தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.தமிழகத்தில் ஆயிரக்கணக்கான நடுகற்கள் பாழடைந்து மண்ணில் புதைந்தவண்ணம் உள்ளன.இவற்றைத் தூக்கி நிறுத்தி பீடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...