தமிழகமே தமிழகமே! நேசமணியைவிட அவசியமானதாக காவிரி பிரச்சனை தெரியவில்லையா?
————————————————
நேசமணி என ஏதோ தேவையில்லாத ஒன்றைப் பற்றி சமூகவலைத் தளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை, வறட்சி நீடிக்கின்றது. கோடை காலத்தில் குடிநீர் தேவைக்கு என்ன செய்யப் போகின்றோம் என்ற நெட்டீசன்களுக்கு இல்லாத அச்சம் சமூக ஆர்வலர்களுக்கு இருப்பதாக அறிகின்றேன்.
கடந்த 28 மே 2019 அன்று காவேரி மேலாண்மை வாரியம் ஜூன் மாதத்திற்கு 9.19 டி எம் சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமே உத்தரவை வழங்கியுள்ள நிலையில் கடந்த ஜூலை 2018 காலகட்டத்தில் முதல்முறையாக காவேரி மேலாண்மை வாரியம் கூடியது. இரண்டாவது முறையாக டிசம்பரில் கூடியதும் அதற்கு பிறகு தற்போது கூடியுள்ளது .
இந்த ஜூன் 2019ஆம் ஆண்டுக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார் மறுத்துள்ளார் மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார். உச்சநீதிமன்ற ஆணையை சட்டப்படி உத்தரவிட்டும் கர்நாடக அரசு மறுப்பது எந்த வகையில் நியாயம்?
காவிரி மேலாண்மை வாரியம் ஒழுங்காற்று குழு நேரடியாக ஆய்வு செய்து சொல்வதற்கு கூட இல்லாத உரிமையை கர்நாடக நீர்வளத் துறை அமைச்சருக்கு யார் அளித்தது? கர்நாடகம் தேவையற்ற சாக்கு சொல்லி இழுத்தடிப்பு செய்து நொண்டி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது
தமிழக அரசு நம் உரிமையை கேட்டுப் பெறுவதற்கு தக்க குரல் எழுப்ப வேண்டிய நேரத்தில் அமைதி காக்கக் கூடாது.
கடந்த 2012 முதல் இம்மாதம் மே மாதம் வரை திறந்துவிட வேண்டிய 19.5 டிஎம்சி தண்ணீரையும் திறந்து விடவில்லை. தமிழக அரசும் எவ்வித கூச்சநாச்சமின்றி மெத்தனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.
காவேரி மேலாண்மை ஆனையத்தின் உத்தரவின்படி நமக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை அணையின் இருப்பை கூட நேரில் சென்று ஆய்வு செய்து காவேரி ஆணையமும், ஒழுங்காற்று குழுவை முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தில் சரிவர இயங்கவில்லை. குறுவை சாகுபடி காவிரி ஆணையம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நமக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை அளிக்க வேண்டும். இதனை காவிரி மேலாண்மை வாரியம் கண்காணிக்க வேண்டும். பெங்களூரில் அமைக்கப்பட்டிருந்த ஒழுங்காற்று குழு இதுவரை செயல்படவில்லை.
தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்ற இந்த காலகட்டத்தில் நேசமணி. மீ டு என்ற தேவையற்ற பொழுது போக்குகளை தேவையற்ற பொழுதுப்போக்குகளில் காலத்தை விரயம் செய்து ஊடகத்தின் கவனத்தையும் ஈர்த்து வீணடித்துக் கொண்டிருக்கிறோம் .
பிரச்சனைகளை பிரச்சினையாக கவனியுங்கள் , தேவையில்லாதவற்றை பிரதானமாக கவனித்தால் நம்முடைய உரிமை பறிபோகும்.
தமிழகமே தமிழகமே! நேசமணியை விட அவசியமானதாக காவிரி பிரச்சனை உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?
#காவிரிமேலாண்மை
#காவிரி_ஒழுங்காற்றுவாரியம்.
#pray_for_Neasamani
#kSRadhakrishnanposting
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
30-05-2019
No comments:
Post a Comment