———————————————
#திருநெல்வேலி , #தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயப் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக உள்ள பாபநாசம் அணை -#காரையாறு அணை நீர்மட்டம் குறைந்துவிட்டது.
பத்தடிக்கும் குறைவாகவே நீரளவு இருக்கிறது.இது ஒரு பழமையான அணைக்கட்டு.அணை காட்டிய காலத்திலிருந்தே இதை சீர்திருத்தி தூர்வாரி சரியாக பாராமரிக்கவில்லை.
அந்தக் காட்சியை இப்படங்களில் காணலாம்.வெறும் சேறாக இந்த அணை கண்ணில் படுகிறது. தற்போது நீர்மட்டம் குறைந்ததால் அணையிலிருந்த மீன்கள் செத்து துர்வாடைவீசுவதால் இந்தப் பகுதியில் நடமாட முடியவில்லை.இந்த நிலை கடந்த பத்து நாட்களாக நீடிக்கிறது. மாநில அரசும் பாராமுகமாகவே இருக்கிறது.
பாபநாசம் அணை பகுதிகள் நீராதாரம் மட்டுமல்ல அருவிகள் நிறைந்த சுற்றுலாத் தளமுமாகும். திருநெல்வேலி தூத்துக்குடி, குமரி,விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வந்து போகும் மிக அழகிய பகுதியாகும்.தற்போது வீசும் துர்வாடையால் வந்துபோகும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிப்பதைக் காண முடிகிறது. இனியும் மெத்தனம் காட்டாமல் இறந்த மீன்களை அப்புறப்படுத்தி, அந்த கழிவை மக்கள் நடமாட்டமில்லாத உரிய இடத்தில் போடவேண்டும்.
#திருநெல்வேலி
#பாபநாசம்அணை #karaiyardam
KSRPostings
KSRadhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-05-2019.
No comments:
Post a Comment