தேர்தல்
களப்பணி பயணத்தின்போது, எட்டையபுரம், விளாத்திகுளம், நற்கலைக்கோட்டை ஆகிய பகுதிகளில்
ஆடு வளர்ப்பு மற்றும் ஆட்டுச் சந்தையை பார்க்கும்போது பழைய நினைவுகள் வந்தன. ஆடு வளர்ப்பு
இப்போது குறைந்துவிட்டது. விவசாயிகள் நிலங்களை பயிர் செய்யும்போது ஆட்டுக் கிடை அமைத்து
மண்ணை பக்குவப்படுத்துவார்கள். இப்போது அந்த வழக்கங்கள் எல்லாம் மறைந்து வருகிறது.
எட்டையபுரம் ஆட்டுச் சந்தை சனிக்கிழமைதோறும் கூடுகிறது. இன்றைக்கு 5 லட்சம் ரூபாய்க்கு
அங்கே வணிகம் நடக்கிறது. வேம்பாபாறில் ஆடு வளர்க்கும் முறையும் தற்போது குறைந்துவிட்டது.
கி.ரா. தனது படைப்பில் கிடை, கீதாரி பற்றியும் கூறுகின்றார். ஆட்டுக் கூண்டுகள் எல்லாம்
கிராமங்களின் அடையாளங்களாக இருந்தன. இப்போது அதெல்லாம் இல்லாமல் ஆகிவிட்டது.
ஆட்டின் வகைகள்
1.
வெள்ளாடு
வகைகள்
i. நாட்டு ஆடு
ii. சீனி ஆடு
iii. பல்லை ஆடு
2.
செம்மறி
ஆடு
i. நாட்டு ஆடு
ii. தெற்குத்தி ஆடு
iii. மகிளம்பாடி ஆடு
என தென்மாவட்டங்களின் ஆடுகளின் பிரிவுகள் உண்டு. சேலம்
மேச்சேரியில் வேறு வகையான ஆடுகள் உண்டு.
தென்மாவட்டங்களின் ஆட்டுச் சந்தைகள்:
1.
திங்கள்
கிழமை - அருப்புக்கோட்டை, கடையம் (தென்காசி அருகே), மேலூர் (மதுரை)
2.
செவ்வாய்
கிழமை – பாம்புக் கோவில் சந்தை (சங்கரன்கோவில் அருகே), மேலப்பாளையம் (திருநெல்வேலி),
டி. கல்லுப்பட்டி (மதுரை)
3.
வியாழக்
கிழமை – கயத்தாறு, புதியம்புத்தூர் (ஒட்டப்பிடாரம் அருகே), ராஜபாளையம்
4.
வெள்ளிக்
கிழமை – திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை, வள்ளியூர், முக்கூடல், மதுரை மாவட்ட
திருமங்கலம், அழகர் கோவில் (மதுரை)
5.
சனிக்
கிழமை – எட்டையபுரம், சாத்தூர் மற்றும் ரெட்டியார்பட்டி
6.
ஞாயிற்றுக்கிழமை
– திருவேங்கடம் (சங்கரன்கோவில்)
இப்படிப் தான் ஆடுகள் குறித்தான இன்றைக்குள்ள தரவுகள்
உள்ளன.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-05-2019
No comments:
Post a Comment