Friday, May 10, 2019

எழுவர் விடுதலையில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, கடந்த 1991ல் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 23 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் 3 பேரை தவிர அனைவருக்கும் படிப்படியாக ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது.

ஆனால்,பேரறிவாளன்,முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனை குறைக்கப்படவே இல்லை. இது தொடர்பாக தமிழகத்தில் 10 ஆண்டுகளாக மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி,ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளது. 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரசின் நிர்வாகி அமெரிக்கா நாராயணன், வாழப்பாடியார் மகன் ராம சுகந்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.


#KSRPostings
#KSRadhakrishnanPostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-05-2019

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".