Tuesday, May 14, 2019

தமிழகத்தின் நிலத்தடிநீர்

---------------------------------------
தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரம்பலூர் மாவட்டத்தில்5.50 மீட்டர், திருவண்ணாமலை மாவட்டத்தில்4.55 மீட்டர் ஆழத்துக்குச் சென்று விட்டதாக பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர்மட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர்வள அமைப்பின் சார்பில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து மாவட்டந்தோறும் 3500 க்கும் அதிகமான கிணறுகளில் இருந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டில் அக்டோபர் , நவம்பர் மாதங்களில் பெய்யும் தமிழகத்துக்கான வடகிழக்குப் பருவமழையும் பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென சரியத்தொடங்கியுள்ளது.இதனால் குடிநீருடன் சேர்த்துப் பொதுப் பயன்பாட்டிற்கான நீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
பெரம்பலூர, திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏப்ரலில் எடுத்த ஆய்வுக்கும், இப்போது ஏப்ரலில் எடுக்கப்பட்ட ஆய்வையும் ஒப்பிடும்போது நிலத்தடி நீர்மட்டம் 5 மீட்டர் ஆழம் வீழ்ந்துள்ளது.பெரம்பலூரில் கடந்த ஆண்டில்8.15 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இந்த ஆணடில்5.5 மீட்டர் குறைந்து13.65 மீட்டர் ஆழத்தில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4.95 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் 9.50 மீட்டர் ஆழத்துக்கு சென்றுள்ளது. 
திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி,
விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், அரியலூர், சேலம், நாமக்கல், நீலகிரி, சிவகங்கை, விருதுநகர், குமரி, சென்னை ஆகிய மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட நிலத்தடிநீர் மூன்று மீட்டர் உயர்ந்திருக்கிறது.
கடலூர் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருப்பூர்,திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், தேனி ,தூத்துக்குடி, நெல்லை ஆகிய 12 மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.கோடை காற்று துவங்கியிருக்கும் நிலையில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறையும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தப் பொறுத்தவரை நிலத்தடி நீரை அதிகப்படியான பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எடுக்கும் அளவுக்கு சேமிக்கும் பழக்கம் இல்லை.
கடலோர மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் கடல்நீர் புகுந்து வருவது ஒட்டு மொத்தமாக நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்துக்கு கைகொடுக்கும் பட்சத்தில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கலாம்..


கே. எஸ் .இராதா கிருஷ்ணன் 
14-5-2019.

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...