கழகப் பொருளாளர் அண்ணன் துரைமுருகன் ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்தார்.
இன்று மாலை(6.05.2019) தூத்துக்குடியில் அவரைச் சந்தித்து நீண்டநேரம் உரையாடும் சூழல் அமைந்தது. வரலாற்றுச் செய்திகளைப் பற்றி எல்லாம் குறிப்பிட்டார்.இந்திய வரலாறு தமிழகத்திலிருந்தே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று நான் கூறியதற்கு அண்ணாவும் இதைத்தான் கூறினார் காவிரிக்கரையிலிருந்தே இந்திய வரலாறு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று துரைமுருகன் தெளிவாக்கினார்.
இந்தியப் விடுதலைப்போரில் மீரட் கலவரத்திற்கு முன்பே வேலூர் புரட்சி உங்களூரில் தானே ஆரம்பித்தது அண்ணே ! என்று நான் குறிப்பிட்டதும், வேலூர், செஞ்சி,ஆற்காடு,காஞ்சி போன்ற நகரங்கள் எங்கள் பகுதிகளெல்லாம் வரலாற்றில் தடம் பதித்தவை என்று குறிப்பிட்டார்.
நான் பதிப்பித்த தமிழறிஞர் பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின் வீரபாண்டிய கட்டபொம்மன் பராக்கிரமத்தைச் சொல்லும் #பாஞ்சாலங்குறிச்சி வீரசரிதம் நூலை வழங்கியபோது பக்கங்களைப் புரட்டி வீரத்தைப் பறை சாற்றும் வரலாற்று நூல் என்று பாராட்டினார்.
தலைவர் கலைஞர் தன் வாழ்நாளில் இறுதியாக அணிந்துரை வழங்கிய நூல் பாஞ்சாலங்குறிச்சி வீர சரிதம்.கட்டபொம்மனுக்கு கோட்டையும் கட்டி அவரின் வாரிசுகளுக்கு நலத்திட்ட உதவியும் வழங்கியது தலைவர் கலைஞர் தான். கட்டபொம்மனின் வீரத்தைத் தலைவர் கலைஞர் மிகவும் நேசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-05-2019
No comments:
Post a Comment