Tuesday, May 14, 2019

ராஜீவ் கொடூரப் படுகொலையை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ராஜீவ் கொடூரப் படுகொலையை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
படுகொலை பற்றிய புலனாய்வு முறையாகச் செய்யப்படவில்லை என்ற சந்தேகம் அப்போது இதற்காக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள் கிளப்பியுள்ளார்கள். ஒய்வு பெற்ற நீதிபதிகளும் இதே கருத்தையே கூறியுள்ளார்கள்.விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. திரும்ப திரும்ப; மறுபடியும் இப்போதும் மத்திய அரசு தடை ஆணை பிறப்பிதுள்ளது.

Home Ministry Reply : The Central Government has extended the ban on the Liberation Tigers of Tamil Eelam (LTTE) for another five years under sub-sections (1) and (3) of section 3 of the Unlawful Activities (Prevention) Act, 1967 (37 of 1967) with immediate effect. The notification in this regard was issued here today.
The notification states that the LTTE’s continued violent and disruptive activities are prejudicial to the integrity and sovereignty of India; and it continues to adopt a strong anti-India posture as also continues to pose a grave threat to the security of Indian nationals.
இந்த ஆணையில் ஐந்தாண்டுகள் தடை என்ற செய்தி ,2014 பிறப்பித்த உத்தரவிலுமில்லை,தற்போதைய உத்தரவிலும் குறிப்பிடப்படவில்லை.கடந்த காலங்களில் இது குறித்து தீர்ப்பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வைகோ வழக்குதொடர்ந்தார்.இதுபோல இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் 1975 காலகட்டங்களில் ஆனந்தமார்க் தடைசெய்யப்பட்டது.பின்னர் அது தளர்த்தப்பட்டது.
முள்ளிவாய்க்கலுக்குப்பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றி எந்த சர்ச்சையும்எழவில்லை.
ஐரோப்பிய நாடுகள் கூட இதிலிருந்து பின்வாங்கிக் கொண்டன.திரும்பத் திரும்ப இந்திய அரசு மட்டும் ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை தடை உத்தரவை நீட்டிப்பது தேவைதானா.?
என்ற வினா எழுகிறது.

சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும், நடுநிலையுடனும் மத்திய அரசு இந்த விசயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது.

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-5-2019.

No comments:

Post a Comment

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான #தன்மானம், #சுயமரியாதை

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அ...