Tuesday, May 21, 2019

ஓர் முன்னாள் முதல்வர் / முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மனைவியின் நிலைமை.....

Image may contain: 1 person, selfie and close-up
ஓர் #முன்னாள்முதல்வர்,முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்மனைவியின் நிலைமை..... 
இது தான் உலகம். இவரால் பயன்பெற்றவர்கள் இன்று உச்சத்தில்யுள்ளனர். அவர் நினைவை போற்றும் வகையில் 19-5-2019ல் வெளியான விளம்பரங்களை பாரீர்...
தினத்தந்தியில் 7ம் பக்கம். ஆங்கில இந்துவில். அதுவும் அவரது உறவினர்கள் 
கொடுத்தது.

வி.என். ஜானகி அம்மா அவர்கள் சொந்த ஊர் கேரளா பாலக்காட்டுக்கு அடுத்து உள்ள வைக்கம். இவர் பிரபல கர்நாடக பாடல் அசிரியர் பாபநாசம் அவருடைய தம்பி ராஜகோபால் ஐயருடைய மகள் தான் வி.என். ஜானகி அம்மா அவர்கள். வைக்கத்தில் பிறந்தவராக இருந்தாலும் படித்தது, நடனம் கற்றக்கொண்டது எல்லாம் சென்னைதான். இவருடன் பிறந்தது ஒரு ஆண் அவர் பெயர் நாராயணன். இவர்கள் சென்னை மைலாப்பூர் கேசவப் பெருமாள் கோயிலுக்கு அருகில் வசித்தார்கள்
வி.என். ஜானகி அவர்கள், பிரபல டைரக்டர் கே.சுப்பிரமணி, நடிகை எஸ்.டி. சுப்புலட்சுமி அவர்கள் நடத்தி வந்த நாடக குழுவில் நடித்து வந்தார். பிறகு டைரக்டர் கே. சுப்பிரமணி வழியாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" இந்த படத்தில் கதாநாயகியாக ரொம்ப பிரமாதமாக நடித்துள்ளார். அந்த படத்தில் இவர் ஆயிரம் தலைகளை வெட்டி குவிக்கும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் அந்த படம். எம்.ஜி.ஆர். அவர்களுடன் கதாநாயகியாக நடிக்க சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் மோகினி 1948ல் வெளிவந்தது. அதை அடுத்து மருதநாட்டு இளவரசி, நாம் போன்ற படங்கள் இவர்கள் நடித்த படங்கள். இந்த கால கட்டத்தில் இல்லற வாழ்க்கையே நமக்கு இனிமேல் இல்லை தான் உண்டு தன் தொழில் உண்டு உழைப்பே உயர்வு என்ற ஏணியில் ஏறிக்கொண்டு இருக்கும் போது எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கல்யாணம் நடக்க இயற்கை அழைக்கிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் மூன்று படங்களில் ஜானகி அம்மாள் நடித்து உள்ளார்கள். 1957ல் எம்.ஜி.ஆர் அவர்களும், வி.என். ஜானகி அம்மா அவர்களும் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள்.

வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ராமாபுரம் வீட்டிற்கு சென்ற போது அறிமுகமும் உண்டு.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-05-2019
Image may contain: 1 person
Image may contain: 4 people

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...