Friday, May 10, 2019

இராஜீவ் படுகொலையில் 7பேர் விடுதலையும், இயற்கையின் நீதியும்.

*இராஜீவ் படுகொலையில் 7பேர் விடுதலையும், இயற்கையின் நீதியும்.*
-------------

இராஜீவ் படுகொலையில் 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநரே இந்த விவகாரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துவிட்டது.
இன்னும் தமிழக ஆளுநர் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தாமல் கிடப்பில் போட்டால் அரசியல் சாசனத்திற்கு முரணானது.
ஏற்கனவே பலமுறை நீதிமன்றங்கள் சொல்லியும் இந்த பிரச்சனையை பைசல் செய்யாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு புறம்பானதாகும்.

இந்த பிரச்சனையில் தமிழக ஆளுநர் மேலும் முடிவெடுக்காமல் மௌனம் சாதித்தால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு மறுபடியும் கூடி முடிவெடுத்து இவர்களை விடுதலை செய்யலாம். பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை, மரபின்படி அந்த அரசின் தீர்மானத்தையோ, சட்டத்தையோ ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தினால் திரும்பவும் பிரிட்டிஷ் அரசாங்கம் இரண்டாவது முறை (Second Reading) அரசாங்கமே ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக்கலாம், உரிய ஆணைகள் பிறப்பிக்கலாம்.
அதே நிர்வாகவியல் சட்டம் மற்றும் மரபுகள்படி (Administration Law - Conventions and Practices) இந்த ஏழு பேரையும் தமிழக அரசே விடுவிக்க அதிகாரம் உண்டு.
இந்த ஏழு பேர் விடுதலையில் மத்திய அரசும், தமிழக ஆளுநரும், தமிழக அரசும் இதயசுத்தியோடு இல்லாமல் கண்ணாமூச்சி ஆடுவது நல்லதல்ல. இந்த எழுவர் கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் தங்களுடைய இளமைக் காலத்தையும், எதிர்காலத்தையும் பறிகொடுத்து சிறைக் கொட்டடியில் வாழ்கின்றனர். இதற்கு தீர்வு தான் என்ன?
அதிகாரத்திலும், ஆட்சியிலும் உள்ளவர்கள் இயற்கையின் நீதியை மதித்து கடைபிடியுங்கள்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-05-2019
Image may contain: text
Image may contain: 7 people, people smiling

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...