Friday, May 10, 2019

#மரக்கால்


No photo description available.

-------------------

இன்று கிராமத்தில் நெல் அறுவடை செய்து அதை களத்துமேட்டில் அளக்கும் மரக்கால்களைப் பார்க்க முடிந்தது. பெரிய மரக்காலுக்கு முத்திரை மரக்கால் என்றும், சின்ன மரக்காலுக்கு பட்டை மரக்கால் என்றும் அழைப்பர்.பெரிய 
மரக்கால் 8 படி ஆகும். பெரிய மரக்கால் 8 லிட்டர் சின்ன மரக்கால் 4 லிட்டர் கணக்கு ஆகும் (1/12கலம்).

எட்டயபுரத்தில் நெல்மணிகளை இப்படி மரக்கால் கொண்டு ஒன்று, இரண்டு என அளக்கும்போது எட்டாவது மரக்காலை மகாராஜா மரக்கால் என்று சொல்வார்கள்.
பலர் எட்டப்பனை கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்தவர் என்று பேசினாலும் அவரை மகாராஜா என்றே அப்பகுதி மக்கள் அழைப்பது வாடிக்கை. அவர் செய்த தமிழ்த்தொண்டும், குடிமை பணிகளும், சத்திரங்கள், அன்னச் சாவடிகள் போன்றவற்றை அமைத்ததெல்லாம் இன்றைக்கும் கழுகுமலை, எட்டயபுரம் பகுதிகளில் பார்க்கலாம். எட்டயபுரத்தில் பாரதியார் அமர்ந்த கிழக்குத் தெப்பமும், ஊரின் மேற்கே உள்ள தெப்பமும் அன்று போல் இன்று வரை பலமாக இருந்தாலும் போதிய பராமரிப்பு இல்லை. சுப்பிரமணிய பாரதி, முத்துசாமி தீட்சிதர், நாவலர் சோமசுந்தர பாரதி, உமறுப்புலவர் போன்ற பல அறிஞர் பெருமக்களை ஆதரித்தது எட்டயபுரம் சமஸ்தானம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-05-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...