----------------------------------------------------------------
ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பணி முடித்துவிட்டு எட்டயபுரம் செல்லும் வழியில் பிதப்புரம் கிராமம் சென்றேன்.
இக்கிராமத்தில் மாகவி பாரதியின் தந்தையார் சின்னசாமி அய்யர் தனது மகனின் எதிர்காலத்திற்காக பருத்தி அரவை ஆலை ஒன்றை அமைத்து தர விரும்பினார்.
ஆங்கில ஆட்சியில் வங்கிக்கடன் வாங்கி உருவாக்கப்பட்டது அந்த ஆலை. ஆனால் மகாகவி பாரதியோ கவிதைகள் எழுத புறப்பட்டுவிட்டார்.
ஆலையை நடத்த முடியாமலும் வாங்கிய கடனைக் கட்ட முடியாமலும் போனது. அப்பருத்தி அரவை மில் இடிந்து தரைமட்டமாகி வேலி மரங்கள் அடர்ந்து சோகமாக காட்சியளிக்கிறது அந்த ஆலை.பாரதி நூற்றாண்டில் தமிழக அரசு எட்டையபுரத்தில் அமைக்கப்பட்டது.
No comments:
Post a Comment