*காலச்சக்கரங்கள் வேகமாக ஓடுகிறது. 45 ஆண்டுகள் கடந்துவிட்டது. மலரும் நினைவுகள்*........
————————————————-
இன்று(18-6-2019)டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு ஒரு நிகழ்விற்கு சென்றபோது, 1975 காலகட்டங்களில் சில நாட்கள் முதுகலைப் பட்டம் சேர்ந்து அப்போது உலாவிய இடங்களை திரும்பவும் பார்க்க முடிந்தது. வகுப்பறை, நூலகம், கேண்டின், ஜவகர் புத்தக கடை, துணைவேந்தர் அலுவலகம், என அப்போது கால் போன வாக்கில் உலாவிய இடங்களும், பழைய நினைவுகளோடு கேண்டினில் தேநீர் சாப்பிட்டுக் கொண்டு ஒரு அரை மணி நேரம் இருந்தது மனதிற்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தந்தது.
காலச்சக்கரங்கள் வேகமாக ஓடுகிறது. 45 ஆண்டுகள் கடந்துவிட்டது. மலரும் நினைவுகள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-06-2019













No comments:
Post a Comment