#ஐநாபாதுகாப்புஅவையில்இந்தியா நிரந்தரமில்லாத இடம்பெற 54 நாடுகள் ஆதரித்துள்ளன. கடந்த காலத்தில் 1950 - 51லும், 1967 - 68லும், 1972 - 73லும், 1977 - 1978லும், 1984 - 85லும், 1991 - 92லும், 2011 - 2012லும் என ஐ.நா. தற்காலிக உறுப்பினராக பாதுகாப்பு அவையில் இந்தியா இடம்பெற்றது. ஐ.நா. அவையில் 193 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
இந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பதவிக்காலம் என்ற முறையில் 5 தற்காலிக உறுப்பினர்களை தேர்வு செய்வார்கள். இந்தியா முயற்சித்ததோ நிரந்தர உறுப்பினர் பதவி. அதற்கான முன்னெடுப்பு இன்னும் வலுவாக எடுத்துச் செல்லவேண்டும். இதுவொரு நீண்டகால கோரிக்கை. ஐ.நாவில் நிரந்தர உறுப்பினர்களாக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் உள்ளது. இவர்களுக்கு வீட்டோ (VETO) எனப்படும் தனி அதிகாரம் உள்ளது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-06-2019
No comments:
Post a Comment