இன்று #பன்னாட்டுஅகதிகள்நாள்
***************************
ஈழத்தமிழர்களுக்கு கோரிக்கைகள் உள்ளன. பாசிச இலங்கை சிங்கள அரசின் மீது போர் குற்ற விசாரணை, இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிப்பது, தமிழீழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு நடத்துவது, போர் காலத்தில் கைது செய்தவர்களை விடுதலை செய்வது, வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களை பற்றிய விசாரணை, விவசாய நிலங்கள் விடுவிப்பு, இராணுவத்தை தமிழர் பகுதியிலிருந்து திரும்ப பெறல் என்று பல கோரிக்கைகள் ......
இவைகளை முன்நிறுத்தி ஈழத்தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.அந்த நிலையில் தமிழகத்தில்யுள்ள ஈழ தமிழ் அகதிகள் கோரிக்கைகள்:
1.குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு (2 முதல் 5 ஆண்டுகள் ) மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கு! ( அய்ரோப்பாவில், கனடாவில் இப்படி குடியுரிமை ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது)
அல்லது
ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கலாம்.
அல்லது
தமிழீழ ஏதிலியர் கூட்டமைப்பு முன் வைத்துள்ள தமிழீழ ஏதிலியர் அனைவருக்கும் இடைக்கால குடியுரிமை வழங்கலாம்
2.இலங்கை செல்ல விரும்பும் எவ்வித இருப்பு (overstay)மற்ற கட்டணங்கள் இல்லாமல் அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்பவும்.
3.பல அகதிகள் முள் வேலி முகாமில் உள்ளனர். அவர்கள் விடுவிக்க வேண்டும்.
4. திபெத்திய அகதிகளுக்கு கிடைக்கும்
சலுகைகள் அணைத்தும் ஈழ அகதிகளுக்கும் கிடைக்க வேண்டும்
போன்ற சிலகோரிக்கைகளை...
#ஈழத்தமிழ்அகதிகள்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-06-2019
No comments:
Post a Comment