#கதைசொல்லி இதழின் 33வது பிரதியை தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களிடம் அளித்தேன். அதனை பார்த்துவிட்டு சிறப்பாக வந்துள்ளது என்றார். அதில் ப்ரியா ராஜீவ் எழுதிய ‘நியதிகள்’ கவிதையை குறித்து இந்த வார நடுப்பக்க *கலாரசிகனில்* சிறப்பாக எழுதியுள்ளார், அவரது புகைப்படத்தையும் தொடர்பு எண்ணையும் என்னிடம் கேட்டார். அந்தநேரத்தில் எடுத்துக் கொடுக்க முடியவில்லை. நல்ல கவிதையாக இருந்ததால் பிரசுரித்தேன். அவரை பற்றிய அறிமுகம் எனக்கு இல்லை என திரு வைத்தியநாதனிடம் சொன்னேன்.
கலாரசிகன் வந்துள்ள செய்தி வருமாறு.
******
‘’பரபரப்பான தனது அரசியல் வாழ்க்கைக்கு நடுவிலும் வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனால் எப்படி கதைசொல்லி இலக்கிய காலாண்டிதழை வெளிக்கொணர முடிகிறது என்று அவருடைய நண்பர்களான எங்களுக்கெல்லாம் எப்போதுமே வியப்புண்டு. தரமான கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று கதைசொல்லி தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டு பயணிப்பதில் மகிழ்ச்சியும் உண்டு. புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதில் கதைசொல்லிக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. கதைசொல்லி காலாண்டிதழின் 33வது இதழை கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தந்தவுடன் அதை பிரித்துப் படித்தேன். பக்கங்களைப் புரட்டினேன். கண்ணில்பட்டது *பிரியா ராஜீவ்* எழுதிய கவிதை. கிராமங்களில் படித்து, வளர்ந்து இன்றும் கூட அந்த மண்வாசனை மாறாமல் இருப்பவர்கள் அனைவரின் ஆதங்கத்தையும் பொட்டில் அடித்தாற்போல விட்டுவிட்டு வைத்து போகிறது கவிதை வரிகள். படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால் எப்படி?
பச்சப்பட்டுடுத்தி
விளையும் வயல்வெளியும்
தோப்பும் தொரவுமாக
தோரணையான துரையாக...
சிங்கம் போல இருந்த ஊரு
சீக்காளி ஆனதய்யா... கரும்பு வயலெல்லாம்
காற்றாலை வயலாச்சு தோப்பு தொரவெல்லாம்
தொகுத்து மனையாச்சு
விளைவிச்ச விவசாயி
கூலி வேலைக்கு வந்தாச்சு...
ஆத்தங்கரை ஆலமரம்
அடியோடு சாஞ்சிடுச்சு
ஆ றோடிய தடம் மட்டும்
அழுகை நீ ரோடிய தடமாச்சு
நான் பார்த்த என் ஊரை
நெனைப்போடு புதைச்சாச்சு!!’’
#கதைசொல்லி
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-06-2019
This comment has been removed by the author.
ReplyDeleteபேஸ்புக்கில் எனது விலாசம் தந்தேன் தாங்கள் புத்தகம் அனுப்பிவைக்க கேட்டு கொள்கிறேன்....
ReplyDelete9487599487