மெட்ராஸ் ராஜதானியின் 1947 ஆம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக (Premier)பதவியேற்ற பிறகு 1928ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி மொத்த பதவிகள் 14 என்றால் பிராமணருக்கு இரண்டு, கிறிஸ்தவர், முஸ்லிம் ஆகியோருக்கு தலா 1, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தலா 2, பிராமணரல்லாத மற்றவர்களுக்கு ஆறு என்ற விகிதத்தில் வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே ஓமந்தூராரின் சென்னை மாகாண அரசு தான் முதன்முதலாக தனி இடஒதுக்கீடு வழங்கியது.
இந்தியா குடியரசாகி 1950இல் புதிய அரசியல் சாசன சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டு பிராமண மாணவர்கள் வகுப்புவாரி ஒதுக்கீட்டால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒதுக்கீட்டு முறை இந்திய அரசமைப்பு சட்ட விதிகளுக்குப் புறம்பானது என்று வழக்குத் தொடுத்தனர். இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய கமிட்டியில் இடம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், இந்த வழக்கில் வாதிகளின் சார்பில் ஆஜராகி வாதிட்டார். வழக்கின் முடிவில் சென்னை உயர்நீதிமன்றம் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து உத்தரவிட்டது.
சென்னை மாகாண அரசின் மேல்முறையீட்டுக்காக உச்சநீதிமன்றத்தை அணுகியது. அங்கும் தீர்ப்பு அரசுக்கு பாதகமாகவும் வாதிகளுக்கு சாதகமாக இருந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தது. அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில விஷயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆதிக்க சக்திகள் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டத்தில் தடை செய்ய வைத்தனர்.
இவர் எளிமையான, நேர்மையான விவசாய முதல்வர்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-06-2019
No comments:
Post a Comment