Saturday, June 15, 2019

பார்வையில் பட்டு வாசித்தது........ அக்காலம் #கிராமத்துவாசனை


இப்போது கனவாய் போனதுவே....

கிராமத்து வீட்ல போய் தங்கிட்டு லீவு முடிஞ்சு மறுபடி வேலைக்கு/ஸ்கூலுக்கு போகணுமேன்னு மூட்டை முடிச்சை எல்லாம் கட்டிக்கிட்டு, 

''மத்தியானம் மூணு மணி காருக்கு கிளம்பறோம்...''னு சித்தப்பாக்கிட்டயோ இல்ல மாமாகிட்டயோ அத்தைகிட்டயோ சொல்ல, 

''ஏன் மூணு மணி காருக்கு போறீக? கோழி கூப்ட காலையில எந்திரிச்சு போங்களேன்...''னு மாமா அத்தையில ஆரம்பிச்சு... வீட்ல இருக்க நண்டு சிண்டு எல்லாம் வந்து, ''காலையில போகலாம், காலையில போகலாம்'னு' கெஞ்சிட்டு இருக்கும் போதே...

"வந்து நாளு ஆச்சுதே! வீடு வாசல்லாம் எப்படி கெடக்குன்னே தெரியலை. உங்கண்ணனுக்கு வேற லீவு முடிஞ்சி போச்சு... நாளைக்கு டூட்டில ஜாயின் பண்ணனும். வயல் நடவு வேற கிடக்கு,ஆடு மாடு எல்லாம் என்னமா கிடக்குனு தெரியல,புள்ளைக்குட்டிக பள்ளிக்கூடத்துக்கு வேற ரெண்டு வாரமா மட்டம் அடிச்சுருச்சு''னு அத்தைக்கிட்ட அம்மா சொல்ல...

அவசர அவசரமா சமைச்சு, மத்தியான சாப்பாட்ட ஒரு மணிக்கே கொடுத்து, 

நாம சாப்ட உக்காறதுக்கு முன்னாடி வீட்டு கூடத்துல மூட்டை முடிச்செல்லாம் கட்டி வைச்சுட்டு, ஊருக்கு போக துணியெல்லாம் எடுத்து போட்டுகிட்டு... 

அம்மா, அப்பா, அக்கா, தம்பி எல்லாம் தலை சீவி, பவுடர் அடிச்சு... மூணு மணி காருக்கு ரெடியாகி பேக்கத் தூக்கிட்டு.... 

''போய்ட்டு வர்றேம் மாமா.., 
போய்ட்டு வர்றேம் சித்தப்பா.., 
போய்ட்டு வர்றேம் அத்தை.., 
டேய் கார்த்தி, பிரபு, சுமதி''ன்னு சொல்லிட்டு இருக்கும் போதே....... 

அத்தை ஒரு அம்பது ரூவாய கையில வச்சு மடக்கி ''வச்சுக்கப்பு''ன்னு கொடுக்கும்! 

மாமா ஒரு நூறு ரூவா தாள கைக்குள்ள வச்சு அமுக்கையில, ''வாணாம் மாமா... வாணாம் மாமா''ன்னு நாம மல்லுக்கட்டுவோம்! 

அந்தப் பக்கத்துல, அம்மாவும் அப்பாவும் அவுங்க வீட்டுப் பிள்ளைகளுக்கு காசக் கொடுத்துக்கிட்டு இருக்கும் போதே.....

அத்தையைப் பாத்து அம்மா கண்கலங்க..., அம்மாவ பாத்து மாமா கண்கலங்க..., 
மாமாவ பாத்து அப்பா கண் கலங்க...., 

இவுங்க எல்லாரும் கண் கலங்குறத பாத்து வீட்ல இருக்க நண்டு சிண்டு எல்லாம் கண் கலங்க.... 

அத்தை நம்மளை புடிச்சு கட்டிக்கிட்டு, தலையை கோதிகிட்டே... முதல்ல ஆரம்பிக்கும்....

''ஏண்ணே இன்னும் ரெண்டு நாளைக்கு இருந்துட்டுப் போங்களேண்ணே''ன்னு! 

உடனே மாமாவும், சித்தப்பாவும், சித்தியும், பிள்ளைகளும் 'இரண்டு நாளு இருந்துட்டு போகலாம்'னு சொல்லி ஒருத்தரு ஒருத்தர் மத்திசம் பண்ணிட்டு இருக்கப்பவே.... 

....மணி இரண்டே முக்காலாயி கார் வர காமணி நேரந்தான் இருக்கும்! 

அழுக மாட்டாம அப்பா, அம்மாவைப் பாக்க.., அம்மா, அப்பாவைப் பாக்க...., 

நாங்கள்ளாம் சேந்து இன்னும் ரெண்டு நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு மட்டத்தப் போடலாமேன்னு யோசிச்சுட்டு இருக்கப்பவே.... 

அத்தையோட கடைசிப் பய நம்மள கையப்புடிச்சு இழுத்துக்கிட்டு, ''வெளில வாடா! கல்லா மண்ணா வெளையாடலாம்''னு இழுத்துட்டுப் போவாம்.... பாருங்க...!! 

...அப்போ கேன்சலாவும் திரும்ப ஊருக்குப் போற ப்ளானு!! 

போட்ட நல்ல சட்டைய கழட்டி எரிஞ்சுப்புட்டு பயலுக கூட வெளையாட நாம கிளம்புற நேரத்துல, வீட்ல இருக்க பொம்பளைங்க எல்லாம் கூடி, 'ராத்திரிக்கி என்னத்த சமைக்கலாம்...?!'னு பேச ஆரம்பிக்கிறப்ப, 

அப்பா, மாமா, சித்தப்பா எல்லாரும் மறுபடி திண்ணையில உக்காந்து, ''ஏப்பா. அந்த பெரியாத்தா இருக்குல்ல....''ன்னு
பேச ஆரம்பிப்பாங்க பாத்தியளா....

அப்பத்தாங்க,.... மழை எல்லாம் நல்லா பேஞ்சு ஊரு நாடெல்லாம் செழிப்பா இருந்துச்சு!


Image may contain: one or more people, outdoor and nature

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...