Wednesday, June 12, 2019

ராஜராஜன்

——————
#தஞ்சை பெருவுடையார் கோவிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜனுக்கு கோவில் வளாகத்திற்குள் சிலை வைக்க வேண்டுமென்றார் தலைவர் , அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள். அதற்கு மத்திய அரசு அனுமதியை மறுத்தது.

அதே போலவே தலைமை செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிலும் உள்ள அகழியில் செடிகளும் மரங்களும் வளர்ந்து காடாக காட்சி அளித்தது. அதனை சீர்படுத்த மத்திய அரசின் அனுமதியை நாடினார் கலைஞர். மத்திய அரசு அக்கோரிக்கையும் நிராகரித்தது.
இந்த இரண்டு நிராகரிப்புகளுமே தலைவர் கலைஞர் அவர்கள் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையை கையில் எடுத்ததற்கான காரணங்கள். இதன் விளைவாகவே தலைவர் கலைஞர் ராஜமன்னார் குழுவை அமைத்தார். மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே உள்ள உறவு எப்படி இருக்க வேண்டுமென்றும்,மாநில சுயாட்சி குறித்தும் ராஜமன்னார் குழ பரிந்துரைகள் வலியுறுத்தியது. 
#ராஜராஜன் 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
12-06-2019
No photo description available.
Image may contain: text
Image may contain: one or more people and text
Image may contain: text
Image may contain: one or more people

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...